இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

10,000 ஓட்டங்களைக் கடந்தார் மஹேல

JKR  திங்கள், 26 டிசம்பர், 2011


லங்கைக் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 10,000 ஆவது ஓட்டத்தை இன்று பெற்றார். ஏற்கெனவே 9999 ஓட்டங்களைப் பெற்றிருந்த மஹேல ஜயவர்தன டேர்பன் நகரில் நடைபெறும் தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு ஓட்டத்தைப் பெற்றபோது அவரின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்கள் எனும் மைல் கல்லை கடந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைப் பெற்ற முதலாவது இலங்கை வீரர் மஹேல ஜயவர்தன ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 127 ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த இலக்கை அடைந்துள்ளர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ஓட்டங்களைப் பெற்ற 9 ஆவது வீரர் மஹேல ஜயவர்தன ஆவார். அதிக டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்ற இலங்கைக் கிரிக்கெட் வீரர்களில் மஹேல ஜயவர்தனவுக்கு அடுத்ததாக குமார் சங்கக்கார உள்ளார். 9170 டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்ற அவர் இன்று ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr