இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்காக சேகரித்த பணம் கொள்ளை

JKR  சனி, 24 டிசம்பர், 2011


பி ரித்தானிய மேர்சிசைட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான 30 வயதுடைய மகேஸ் விக்ரமசிங்கவின் குடும்பத்திற்கு உதவி செய்யவென சேகரிக்கப்பட்ட பணத்தொகையை திருடிச் சென்றுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவி மற்றும் அவருடைய இரு பிள்ளைகளுக்கு வழங்கவென, குறித்த இலங்கையர் பணிபுரிந்த ஸ்டேன்லி நியூஸ் என்ற வர்த்தக நிலையத்தில் பணம் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பெட்டியே இவ்வாறு உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பெட்டி உடைக்கப்பட்டு களவாடப்பட்டதன் பின், சந்தேகத்தின் பெயரில் 16 வயதுடைய இரு பிரித்தானிய நபர்களை தேடி வருவதாகவும் சந்தேகநபர்கள் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடன் அறிவிக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். இதேவேளை, மகேஸ் விக்ரமசிங்கவின் கொலை தொடர்பில் 19 வயதுடைய செம் ஹரிசன் என்ற இளைஞன் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr