இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

திருகோணமலையில் பிரபல வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூடு

JKR  புதன், 4 ஜனவரி, 2012


திருகோணமலையில் பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிசார் இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.
இன்று(03.01.2012) இரவு 9 மணியளவில் திருகோணமலை விகாரை வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. மூதூர் மல்லிகைத் தீவு பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான கந்தையா ராஜகோபால் (வயது 38) என்பவரே இத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். குறித்த நபர் தனது வர்த்தக நிலையமான எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து உல்லாச பயணிகள் விடுதிக்குச் செல்லும் வழியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr