இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மாணவியை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சந்தேகத்தில் ஒருவர் கைது

JKR  திங்கள், 5 மார்ச், 2012


யாழ்ப்பாணம், நெடுந்தீவுப் பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படும் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நெடுந்தீவிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டவரெனவும் பொலிஸார் கூறினர். நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மேற்படி மாணவி கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் இவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை வயல்வெளியிலிருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr