யுத்த காலத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவு மற்றும் துப்பாக்கிப் பிரிவு ஆகியவற்றில் மேஜர் பதவிநிலை வகித்த ஒருவர், வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில தினங்களாகவே வவுனியா பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் அடிக்கடி நடமாடியுள்ளார் என்றும் அவர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து கைது செய்யப்பட்டார் என்றும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 28 வயதான சுப்பையா கிருஷ்ணகுமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே, அவர் புலிகள் இயக்கத்தைச் செர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியதாக பொலிஸார் குறிப்பிட்டனர். யுத்தத்தின் போது ஒரு காலை இழந்துள்ள இவர், தற்போது மன்னார், அடம்பன் பிரதேசத்திலேயே வசித்து வருகின்றார். இவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக