இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மட்டக்களப்பில் ரணில் வந்த வளாகத்தில் வெடிகுண்டு

JKR  வெள்ளி, 11 மே, 2012



ட்டக்களப்பு நகரில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக் கிழமை மாலை கலந்து கொள்ளும் நிகழ்வோன்று ஏற்பாடு செய்யப்பட்ட கட்டிடத் தொகுதியில் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி கூறுகின்றது.
மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க தனது கட்சி பிரதிநிதிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் தனித் தனியாக சந்தித்து மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார். மாலையில் மட்டக்களப்பு நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் மற்றுமொரு சந்திப்பொன்றில் அவர் கலந்து கொள்ளவிருந்ததாகவும் , அவ்விடுதியின் கட்டிடத் தொகுதயிலேயே குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்பு உத்தியோகத்தினர்களினால் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டு சிறப்பு அதிரடிப் படையினருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதன் பின்னனி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தயா கமகே தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை முடித்துக் கொண்ட ரனில் விக்கிரமசிங்க கொழும்பு திரும்பினார். குண்டு கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr