இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இந்திய ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்றார்

JKR  புதன், 25 ஜூலை, 2012



ந்தியாவின் 13ஆவது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று புதன்கிழமை கடமை பொறுப்பேற்றார். இன்று காலை தனது இல்லத்தில் இருந்து காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டுக்கு சென்ற பிரணாப் முகர்ஜி, அங்கு மரியாதை செலுத்திய பின் நாடாளுமன்ற மண்டபத்தில் குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.
இதன்போது, பதவி விலகிச் செல்லும் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு சம்பிரதாய முறைப்படி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அவர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் வரவேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், சரியாக காலை 11.30 மணிக்கு பிரணாப் முகர்ஜி புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அவருக்கு தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவர் பதவி ஏற்றுக் கொண்டதும் 21 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. ஜனாதிபதி மாளிகை முன் பிரணாப் முகர்ஜிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றதும் பிரணாப் முகர்ஜியிடம் விடைபெற்றுக் கொண்டு பிரதீபா பாட்டீல் துக்ளக் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். மரியாதை நிமித்தமாக அவருடன் பிரணாப் முகர்ஜியும் செல்வார். பிரதீபா பாட்டீலுக்கு புனே நகரில் பங்களா தயாராகி வருகிறது. அதுவரை டெல்லி பங்களாவில் தங்கி இருப்பார். இன்றைய பதவியேற்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், சபாநாயகர் மீராகுமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநில ஆளுநர்கள் கலந்து கொண்டனர். புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவையொட்டி புதுடில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதவி ஏற்பு நேரத்தின்போது நாடாளுமன்றத்துக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. புதுடில்லி வான் எல்லையும் விமானப்படையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr