இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உதவி

JKR  வெள்ளி, 8 மார்ச், 2013



லங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்க உள்ளதாக அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, நல்லாட்சி போன்றவற்றை மேம்படுத்தும் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊடகங்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் 500000 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புலனாய்வு ஊடகம் மற்றும் ஊடகவியலாளர் சுதந்திரம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் முனைப்புக்களுக்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr