இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பாலச்சந்திரன் படுகொலை மனதை பாதித்துவிட்டது: ராகுல்

JKR  சனி, 9 மார்ச், 2013


வி டுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கொலை உலகத்தை உலுக்கியது போலவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனதையும் பாதித்துவிட்டது என்று இந்திய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக தலைவர்களை டெல்லியில் சந்தித்த அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, பாலச்சந்திரன் படுகொலை உலகத்தை உலுக்கியது போலவே எனது மனதையும் பாதித்து விட்டது என உருகிப் போய் சொன்னாராம். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் இலட்சக்கணக்கான மக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் ஐ.நா.வுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றது. இதே போல உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படக் காட்சி வெளியானது. இதனால் உலகத் தமிழர்களும், மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் கொதித்து எழுந்தன. ஆனால் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது சரிதான் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சாமி கருத்து தெரிவித்தார். பாலச்சந்திரன் படுகொலை குறித்து ராகுல் காந்தியிடம் இருந்து விரைவில்இரங்கல் தகவல் வெளியாகலாம் என டெல்லி அரசியல் வட்டாரம் கூறுகின்றது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr