இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கிளிநொச்சியில் உதயன் கிளைக்காரியாலயம் மீது தாக்குதல்:நால்வருக்கு காயம்

JKR  புதன், 3 ஏப்ரல், 2013


கிளிநொச்சியில் உதயன் பத்திரிகை கிளைக்காரியாலயம் மற்றும் பத்திரிகை விநியோகத்தர்கள்,விநியோக வாகனம் ஆகியவற்றின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நான்கு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருக்கும் உதயன் பத்திரிகையின் கிளைக் காரியாலயத்திற்கு அதன் பின்புறமாக வந்த ஒரு குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் பொன்ராசா (வயது 57), பிரதீபன் (வயது -28) ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த நால்வரில் இருவர் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். பத்திரிகை ஏற்றி வந்த வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசாரும் இராணுவத்தினரும் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr