இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தைரியமிருந்தால் எனக்கு வாக்குரிமை கொடுத்து தேர்தலில் போட்டியிட விட்டுப்பாருங்கள் : சரத் பொன்சேகா சூளுரை

JKR  புதன், 3 ஏப்ரல், 2013



னது வாக்குரிமையை இல்லாமல் செய்தவர்கள் தைரியமிருந்தால் அடுத்த தேர்தல்களில் வாக்குரிமையளித்து போட்டியிட விட்டுப்பாருங்கள் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா சூளுரைத்தார்.
பிட்டகோட்டேயில் அமைந்துள்ள சோலிஸ் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனநாயகக் கட்சியின் முதலாவது செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆட்சியில் உள்ளவர்களினால் எனது உயிருக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனது தலைமையில் உருவான கட்சியில் அரசில் அங்கம் வகிக்கும் பலர் இணைந்து செயற்படவுள்ளனர். எனது வாக்குரிமையை இல்லாமல் செய்தவர்கள் என்னோடு போட்டிபோடுவதற்கு தைரியம் இருந்தால் எனக்கு வாக்குரிமையை வழங்கி அடுத்துவரும் தேர்தலில் போட்டியிடுமாறு சவால்விடுக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr