இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செனல் 4 ஆவணப்படத்தால் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம்: ரணில்

JKR  திங்கள், 20 ஜூன், 2011

செ னல் 4 தொலைக்காட்;சியால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தினால் இலங்கையின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் களங்கம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா பெற்றுக்கொடுத்த பொருளாதார வெற்றி காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது _

JKR  வெள்ளி, 4 மார்ச், 2011

விலைவாசி அதிகரிப்பினால் சரத்பொன்சேகா உள்ளிட்ட படையினர் புலிகளை தோற்கடித்து எங்களுக்கு பெற்றுக்கொடுத்த பொருளாதார வெற்றியை பொருளாதாரத்திற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் காட்டிக்கொடுத்து விட்டது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் பதவியை இராஜினாமா செய்துவிட்டாரா?: ரணில் கேள்வி

JKR  புதன், 5 ஜனவரி, 2011

பிரதம நீதியரசர் தனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டதாகவும் அதற்கான கடிதத்தை கையளித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

அரசின் பங்காளிக் கட்சியாகப் புலிகள் அமைப்பு மாறலாம் : ரணில்

JKR  வெள்ளி, 17 டிசம்பர், 2010

விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரான கே.பி. குமரன் பத்மநாதன் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்வதற்கான அமைப்பின் தலைமைப் பொறுப்பை வழங்கியுள்ள ஜனாதிபதி, எம் மீது புலி முத்திரையை குத்த முயற்சிப்பது என்ன நியாயம்? மிகவிரைவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கலாம்" என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

பதவியேற்புக்கு 500 கோடி ரூபா செலவிடும் அரசு ஏன் சம்பள அதிகரிப்பை வழங்கமுடியாது?: ரணில்

JKR  புதன், 17 நவம்பர், 2010

யுத்தம் முடிவடைந்துள்ள போதும் பாதுகாப்புக்கான செலவினங்கள் 1,400 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப்பிரமாண நிகழ்வுக்காக சுமார் 500 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவ்வாறான செலவினங்களை மேற்கொள்ளும் அரசாங்கத்தால் ஏன் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

மீனவர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு:ரணில் _

JKR  புதன், 21 ஜூலை, 2010

தமிழக மீனவர் பிரச்சினைக்கு இந்திய, இலங்கை அரசுகளின் வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில்

JKR  வெள்ளி, 23 ஏப்ரல், 2010

அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி நாடாளுமன்றத்திற்குத் தெரிவான ஒவ்வொரு உறுப்பினரதும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதியில் இறங்குவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. சபாநாயகர் தெரிவுக்கு பின்னர் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து இன மக்களிடையேயும் சமாதானத்தை ஏற்படுத்த புதுவருடம் வழிகோலட்டும் : எதிர்க்கட்சித் தலைவர்

JKR  புதன், 14 ஏப்ரல், 2010

அனைத்து இன மக்களிடையேயும் சமாதானத்தை ஏற்படுத்த இந்த புதுவருடம் வழிகோலட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலை விட ஆளும் கட்சி 11 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது : ரணில்

JKR  திங்கள், 12 ஏப்ரல், 2010

ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சி பெற்றுக் கொண்டதனை விடவும் 11 லட்சம் வாக்குகள் இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு குறைவாக கிடைக்கப் பெற்றுள்ளதென ஐக்கிய தேசியக் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பின்னரான ஐ.தே.மு அரசாங்கத்தில் மக்களுக்கு பல நிவாரணங்கள்:ரணில் _

JKR  ஞாயிறு, 28 மார்ச், 2010

ஏப்ரல் 8ஆம் திகதிக்கு பின்னர் அமையும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் மக்களுக்கான பல நிவாரணங்கள்,விவசாய,கடற்றொழில்,தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு செயற்பாடுகள்,முதலீட்டு வலயங்கள் உட்பட இன்னும் பல்வேறு திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புத்தளத்தில் தெரிவித்தார்.


உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr