இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தனது நியாயங்களை எழுத்து, வாய்மூலமாக இராணுவ நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும்: இராணுவம் தெரிவிப்பு

JKR  வெள்ளி, 12 பிப்ரவரி, 2010


இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா தனது தரப்பு நியாயங்களை எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மூலமாகவோ இல்லையேல் சட்டத்தரணிகள் மூலமாகவோ இராணுவ நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிராக சாட்சிகளை முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் ஈடுபட்டுள்ளன. அதற்கு பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க மேலும் கூறியதாவது,

"ஜெனரல் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அதன்பிரகாரம் தயாரிக்கப்படும் குற்றப்பத்திரிகை தேவையான சட்ட நடவடிக்கைகளுக்காக இராணுவ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் பொது அவர் தான் விரும்பும் சட்டத்தரணிகளூடாக தன்னை நியாயப்படுத்துவதற்கான காரணங்களை முன்வைக்கவோ, மேன்முறையீடு செய்யவோ அல்லது இராணுவ நீதிமன்றத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்கு செல்லவோ முடியும். அதற்கான சட்ட அனுமதி அவருக்கு உண்டு .

கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியும் முன்னாள் இராணுவ தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை உண்மைக்குப் புறம்பானவையாகவே காணப்படுகின்றன. இதனால் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஜெனரல் பொன்சேகாவின் கைதானது இராணுவ ஒழுங்குவிதிகள் மற்றும் சட்டத்திட்டங்களுக்கமைய எடுக்கப்பட்டதேயன்றி எந்தவொரு அரசியல் சூழலுக்காகவும் மேற்கொள்ளப்பட்டதல்ல.

இராணுவ சட்டத்தின் 57(01)ஆவது சரத்துக்கமையவே ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இராணுவ சேவையில் ஈடுபட்டிருக்கும் காலப்பகுதியில் ஒருவர் குற்றங்களைப் புரிந்திருப்பின் அதன்பின்னரான ஆறு மாத காலப்பகுதிக்குள் அதாவது அவர் ஓய்வு பெற்றிருந்த போதிலும் அவரை இராணுவ சட்டத்துக்கமைய கைது செய்ய முடியும்.

இராணுவ சட்டத்தின் பிரகாரமும், சட்டத்தை மீறிச் செயற்பட்டு வருகின்றார் என்பது உறுதியானதன் பின்னரே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். இந்த கைது தொடர்பிலும் அவர் கைதான சந்தர்ப்பம் தொடர்பிலும் பலரும் பலவாறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்தக் கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

ஜெனரல் பொன்சேகாவை கைது செய்வதற்காக அவரது அலுவலகத்துக்கு சென்ற இராணுவ பொலிஸார் இராணுவ அதிகாரிகள் என்ற வகையில் தங்களது கடமையைச் செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளனர். இதன்போது அவ்வதிகாரிகளை கடுமையாகப் பேசியுள்ள அவர் அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் கூச்சலிட்டுள்ளார்.

இருப்பினும் அவர்கள் அவரைக் கைது செய்துகொண்டே செல்வதாக பிடிவாதமாக நின்றிருந்துள்ளனர். இந்நிலையில் அவர் மீது இராணுவத்தினர் எவ்விதத் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை. அவராகவே சென்று இராணுவத்தினரின் வாகனத்திலும் ஏறியுள்ளார். இந்நிலையில் ஜெனரல் பொன்சேகாவைக் கைது செய்யச் சென்ற அதிகாரிகள் அவரைத் தாக்கி இழுத்துச் சென்றே வாகனத்தில் ஏற்றினர் எனும் குற்றச்சாட்டை இராணுவம் முற்றாக மறுக்கின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா, தற்போது கடற்படையினரின் பாதுகாப்பின் கீழ் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் தங்கியுள்ள குடிமனையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இராணுவத்தினரால் அங்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் எவருக்கும் தெரியாது என்று ஜெனரல் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகா குற்றஞ்சாட்டியிருந்தார். அத்துடன் அவர் தனது கணவரைச் சந்திப்பதற்காக விடுத்திருந்த வேண்டுகோளை கருத்திற் கொண்ட பாதுகாப்பு அமைச்சு அதற்கு அனுமதி வழங்கியது. அவருடன் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷவும் ஜெனரல் பொன்சோகவைச் சென்று சந்தித்தார்.

இதேவேளை ஜெனரல் பொன்சேகாவுக்கான உணவினை எடுத்துக் கொண்டு அவரை எந்நேரமும் போய் சந்திப்பதற்கான அனுமதியும் பாதுகாப்பு அமைச்சினால் நேற்ற முன்தினம் முதல் அனோமா பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்குத் தேவையான அதிகூடிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் போன்றன இராணுவத்தினரால் முழுமையாக வழங்கப்பட்டு வருகின்றன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr