இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஐ.தேக. யானைச்சின்னத்தில் போட்டி : கூட்டணிக் கட்சிகளுக்குள் முரண்பாடு?

JKR  வெள்ளி, 12 பிப்ரவரி, 2010


ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடுவதாக அதன் செயற்குழு நேற்றிரவு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு எதிர்க்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்குள் முரண்பாடான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை பிற்பகல் எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடையே நடைபெற்றது. சின்னத்தை அறிவிக்கும் முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் குழுவினர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் நேற்றிரவு கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திலேயே போட்டியிடுவது எனத் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்க்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏனைய சில கட்சிகளிடையே முரண்பாடு எழுந்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவித்தன. இது தொடர்பில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் கேட்டபோது, "எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் எமக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அறிவிக்கலாம் என முடிவு செய்த பின்னர் ஐ.தே.கட்சி இவ்வாறான தீர்மானத்துக்கு வந்திருக்கிறது. இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்துப் பிரச்சினையில்லை. ஆனால் எமக்கு ஆதரவு வழங்கும் பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்" என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr