இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புனர்வாழ்வளிக்கப்பட்ட அனைத்து சிறுவர் போராளிகளையும் பெற்றோரிடம் கையளிக்க நடவடிக்கை

JKR  புதன், 10 பிப்ரவரி, 2010


புனர்வாழ்வளிக்கப்பட்ட அனைத்து முன்னாள் சிறுவர் படையணியினரையும் பெற்றோரிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இம்மாதயிறுதியளவில் அவர்களில் 273 பேரை பெற்றோர்களிடமோ பாதுகாவலர்களிடமோ ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

மனிதாபிமான நடவடிக்கைகள் இடம்பெற்ற போது 514 சிறுவர் படையணியினர் புனர்வாழ்விற்காக ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளை 120 சிறார்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜகத் வெல்லவத்த தெரிவித்தார்.

இதனடிப்படையில் தற்போது கல்வி போதிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருபவர்களுள் 273 பேரை பொற்றோர் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு மாத்திரமே அவர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகள் வழங்கப்படும் நிலையில் மே மாதமளவில் ஏனையோரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் பெற்றோராலோ பாதுகாவலர்களாலோ பொறுப்பேற்கப்படாதவர்களுக்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr