இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

விசாரணையை இரானுவ பொலிஸார் மேற்கொள்வர் சிவில் சமூகத்தை தலையிடச் செய்யக்கூடாது

JKR  புதன், 10 பிப்ரவரி, 2010


முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு இராணுவ பொலிஸாருக்கு இடமளியுங்கள். இந்த விடயத்தில் சிவில் சமூகத்தை தலையிடச்செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது வீண் குழப்பங்களை ஏற்படுத்தும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் அதில் மேலும் கூறியதாவது,

ச் "ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ள விடயத்தை அரசியல்மயமாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இதன்மூலம் தேர்தல் போராட்டங்களை மேற்கொள்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இராணுவ சட்டதிட்டங்களின் பிரகாரமே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் ஆறுமாத காலப்பகுக்கு இராணுவ சட்டத்துக்கு உட்பட்டிருப்பார்கள்.

இந்த கைது விடயத்தில் தனிப்பட்ட காரணங்களோ அரசியல் காரணங்களோ இல்லை என்பதனை அரசாங்கம் தெரிவிக்கின்றது. இராணுவ சட்டதிட்டங்களுக்கு அமையவே இந்த கைது இடம்பெற்றுள்ளது. எனவே ஜெனரல் சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு இராணுவ பொலிஸாருக்கு இடமளியுங்கள்.

ஜெனரலுக்கு எதிராக சில குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சீருடையில் இருக்கும்போது அரசியல் திட்டங்களை மேற்கொண்டமை, முப்படை தளபதிக்கு எதிராக சதி செய்தமை, இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 1000 பேருக்கு பாதுகாப்பு வழங்கியமை மற்றும் ஆயுத தளபாட கொள்வனவில் ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதனைவிடுத்து வேறு எந்த விடயங்களும் இல்லை என்பதனை தெரிவிக்கின்றோம்.

அந்தவகையில் இராணுவ பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை நடத்துவார்கள். யுத்த விடயங்கள் குறித்து சாட்சியங்களை அளிக்க முடியும் என்று சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு சில தினங்களுக்கு முன்னர் ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனவே இராணுவ பொலிஸாருக்கு அவரை கைது செய்து விசாரணை செய்யும் உரிமை உள்ளது.

30 வருடகால யுத்தத்தை நாங்கள் முடித்துள்ளோம். அதன்போது சர்வதேச மட்டத்தில் பல அழுத்தங்கள் வந்தன. நாங்கள் அவற்றுக்கு பதிலளித்தோம். எனினும் தற்போது ஜெனரல் பொன்சேகா சர்வதேசத்திடம் சாட்சியம் அளிக்க முடியும் என்று கூறுவது வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சர்வதேச மட்டத்தில் சிக்கல்கள் ஏற்படும். எனவே அது தொடர்பில் விசாரிக்க இராணுவத்துக்கு உரிமை உள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது தாக்கப்பட்டார் என்று கூறப்படுவதை முற்றாக நிராகரிக்கின்றோம். முறைப்படியே அவர் கைது செய்யப்பட்டார். எந்தவிதமான தாக்குதல்களும் சித்திரவதைகளும் இடம்பெறவில்லை. அரசியல்வாதிகள் எதனையும் கூறுவார்கள். அவற்றை நாம் நம்ப முடியாது.

சரத் பொன்சேகாவை அவரது குடும்பத்தினர் சந்திக்கலாம். அவர் சிறைக்கூடத்தில் வைக்கப்படவில்லை. அவரிடம் விசாரணைகளே மேற்கொள்ளப்படுகின்றன. சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது தனிப்பட்ட விடயம் அல்ல. விசாரணைகளின் முடிவில் அவர் விடுதலை செய்யப்பட்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஜெனரல் பொன்சேகா ஏன் முன்னரே கைது செய்யப்படவில்லை என்று வினவுகின்றனர். தேர்தல் காலத்தில் அவர் வேட்பாளர். எனவே நாங்கள் அவரை கைது செய்யவில்லை. தற்போது அவர் தேர்தலில் தோற்றுவிட்டார். எனவே விசாரணை நடவடிக்கைகளை எடுக்கின்றோம். தேர்தல் காலத்தில் அவர் கைது செய்யப்பட்டிருந்தால் அனுதாபம் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் யார் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என்று பட்டியல் போடவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். காரணம் அவர்கள் யார் யாரை கைது செய்யவேண்டும் என்று பட்டியல் தயாரித்திருந்தார்கள். போகம்பரை சிறைச்சாலையை காட்டியவண்ணம் சில கூற்றுக்களை விடுத்ததை நினைவூட்ட விரும்புகின்றோம்." எனத் தெரிவித்தார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr