இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜெயராம் வீடு மீதான தாக்குதல் வழக்கு - சீமானுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

JKR  புதன், 10 பிப்ரவரி, 2010


சென்னை: தமிழ்ப் பெண்களை கறுத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று நடிகர் ஜெயராம் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து அவரது சென்னை வீடு தாக்கப்பட்ட வழக்கில் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜெயராமின் பேச்சு, தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் அவரது பேச்சை கண்டித்தனர்.

இந்நிலையில் கடந்த 5 ந் தேதி சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள நடிகர் ஜெயராமின் வீடு மீது தாக்குதல் நடந்தது. வீட்டிற்குள் தீப்பந்தம் எறியப்பட்டது. இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த சிலரைக் கைது செய்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், நடிகர் ஜெயராம் தமிழ் பெண்களை இழிவு படுத்தும் விதமாக பேசியதால் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. அப்போது உணர்ச்சி வேகத்தால் இளைஞர்கள் சிலர் ஜெயராம் வீட்டை தாக்கி உள்ளனர்.

இதில் எனக்கும் எனது இயக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. வேண்டும் என்றே நான் தூண்டி விட்டதாக போலீசார் வழக்கில் என்னை சேர்த்துள்ளனர்.

கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும், தமிழ் மரபையும் கடைபிடிக்கும் என்னை தொல்லை செய்யும் விதமாக போலீசார் தேடி வருகின்றனர். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி கே.என்.பாட்ஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் மூத்த வக்கீல் என்.சந்திரசேகரன் ஆஜராகி வாதாடினார்.

அவர் கூறுகையில், இயக்குநர் சீமான் வளர்ந்து வரும் தலைவர். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். அவர் எந்த வன்முறைக்கும் காரணமாக அமையவில்லை.

வேண்டும் என்றே போலீசார் இரவு பகல் பாராமல் அவர் வீட்டுக்கு சென்று தொல்லை கொடுத்து சித்ரவதை செய்கின்றனர். எனவே போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் தர வேண்டும் என்றார்.

அரசு வக்கீல் துரைராஜ் கூறுகையில், இதே போன்ற செயல்களை சீமான் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் மீது இது போன்ற வன்முறை சம்பவம் தொடர்பான 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்றார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பாட்ஷா, சம்பவ இடத்துக்கு சீமான் வராததால் அவருக்கு முன் ஜாமீன் தரப்படுகிறது. தலா ரூ. 25 ஆயிரத்துக்கு அவர் 2 உத்தரவுவாதத்தை வழங்க வேண்டும். தினமும் காலை 10.30 முதல் 12.30 க்குள் வளசரவாக்கம் போலீசில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்து முன்ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr