இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி

JKR  புதன், 10 பிப்ரவரி, 2010


ரியாத்: சவூதி அரேபியாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தனது 80 வயது கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

சவூதி அரேபியாவில் சிறார் திருமணங்கள் படு சகஜம். சிறு வயதுப் பெண்களை வயதானவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும் அங்கு அதிக அளவில் உள்ளது. இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்தாலும் அரசு இதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

இந்த நிலையில் 80 வயது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு செய்துள்ளார் 12 வயது சிறுமி. இந்த சிறுமியின் வழக்குக்குத் தேவையான சட்ட உதவிகளை அரசு செய்யவுள்ளது.

அரசின் மனித உரிமை ஆணையம், சிறுமிக்கு ஆஜராவதற்காக ஒரு வக்கீலை அமர்த்தியுள்ளது. புரைதா கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

சவூதியைப் பொருத்தவதை இத்தனை வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டப்பூர்வமாக எதுவும் இல்லை. இதன் காரணமாக ஏழைகள், பழங்குடியினர் தங்களது பெண் பிள்ளைகளை வயதுக்கு வந்தததுமே பெரும் பணக்காரர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுகிறார்கள்.

இது அங்கு சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு சிறுமி விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறியுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பதால் பரபரப்பாகியுள்ளது.

இதற்கிடையே சிறார் திருமணங்களைத் தடுக்க அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுதொடர்பான சட்ட மசோதாவை அது தயாரித்து வருகிறது.

விவாகரத்து கோரி மனு செய்துள்ள 12 வயது சிறுமி, அவரது தந்தையின் உறவினருக்கு கடந்த ஆண்டு கட்டிக் கொடுக்கப்பட்டார். இதற்காக வரதட்சணையாக சிறுமிக்கு 85 ஆயிரம் ரியால்கள் கொடுக்கப்பட்டது.

இந்தத் திருமணத்தை எதிர்த்தும், தனது மகளுக்கு விவாகரத்து அளிக்கும்படியும் கோரி சிறுமியின் தாயார் மனு செய்தார். பின்னர் காரணம் கூறாமல் இநத மாதத் தொடக்கத்தில் மனுவை அவர் திரும்பப் பெற்றார்.

இருப்பினும் தற்போது அந்தச் சிறுமி விவாகரத்து கோரியுள்ளார்.

இதுகுறித்து மனித உரிமை ஆணைய வழக்கறிஞர் அலனாட் அல் ஹெஜைலான் கூறுகையில், எங்களது முக்கியக் கவலையே, அந்தச் சிறுமியின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அது கோர்ட்டின் கையில் உள்ளது. இருப்பினும் சிறுமிக்கு ஆதரவாக நாங்கள் நிற்கப் போகிறோம் என்றார்.

இன்னும் சில நாட்களில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கவுள்ளது கோர்ட்.

ஒருவேளை சாதகமான தீர்ப்பு வராவிட்டால் இறுதி வரை சட்ட ரீதியாகப் போராடப் போவதாக மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr