இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அரசியலமைப்பின் அடிப்படையை மாற்ற ஸ்திரமான மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிட்டும்: அரசாங்கம்

JKR  வெள்ளி, 12 பிப்ரவரி, 2010


மிகப்பெரிய தடை தாண்டப்பட்டதை அடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அரசியலமைப்பின் அடிப்படையை மாற்றுவதற்கு தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை முன்னரே கைது செய்திருந்தால் பழியெடுக்கும் செயலெகாண்பித்திருப்பார்கள் .ஜெனரல் கைது செய்யப்பட்டவிடயம் பழியெடுக்கும் செயல் அல்ல என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

"ரஷ்ய பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றோரில் பலர் நாட்டில் முக்கிய நிறுவனங்களில் உயர்பதவி வகிக்கின்றனர். பல்கலைக்கழகத்தின் 50 வருட வரலாற்றில் 14 பேருக்கே டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உள்ளடங்குகின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது தவணையில் சம்பிரதாயமில்லாத நண்பர்களை சம்பாதித்துக்கொண்டார். ஈரான், ரஷ்யா, லிபியா உள்ளிட்ட நாடுகளை நண்பர்களாக்கி கொண்டுள்ளார்.

மிகப்பெரிய தடைத்தாண்டப்பட்டதை அடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அதில் அரசியலமைப்பின் அடிப்படையை மாற்றுவதற்கு தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

18 இலட்சத்திற்கு மேலதிகமான வாக்குகளை பெற்று ஸ்திரமான வெற்றியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் தவறான தகவல்களின் மூலமாக தோல்வியை மூடி மறைப்பதற்கும் வெற்றியை அர்த்தப்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைக் கண்டிக்கின்றோம்.

ஜனநாயகத்தை உருவாக்குவதும் அதனை பாதுகாப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாக மட்டுமே இருக்காது. அதில் எதிர்க்கட்களுக்கும் பொறுப்பு இருக்கின்றது. வாக்களிப்பும், கணக்கெடுப்பும் நியாயமான முறையில் நடத்தப்பட்டதாகவும் அவற்றில் தவறுகள் இடம்பெறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி தேர்தலின் தோல்விக்கு பின்னர் பல்வேறு குழப்பங்களை விளைவிப்பதற்கும், அதில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை பயன்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அது மட்டுமன்றி ஹோட்டலிலிருந்து கட்டளையிடுவதற்கு எடுத்திருந்த முயற்சிகளும் அம்பலப்படுத்தப்பட்டன.

அதுமட்டுமன்றி நீதிமன்ற வளாகத்தின் புனித தன்மையை அசுத்தப்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றத்திற்குள்ளும், வளாகத்திலும் பூரண அமைதி கடைப்பிடிக்கவேண்டும். சிகரட் பிடிக்கவோ, சத்தமாகவோ கதைப்பது மட்டுமன்றி கால்மேல் கால் போட்டிருப்பது கூட தண்டிக்கக்கூடிய அல்லது எச்சரிக்கக்கூடிய குற்றமாகவே கருத்தப்படும்.

முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டுப்படைகளின் தலைமையதிகாரியாக இருந்த வேளையில் அமெரிக்காவிற்கு சென்றிருந்த போது தொலைபேசியின் மூலமாக தன்னிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இரகசியங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். அவ்வாறு பாதுகாக்காதவரை அன்று கைது செய்திருந்தால் அது பழியெடுக்கும் செயலாக சித்திரித்துவிடுவார்கள் என்பதனால் இராணுவ சட்டத்தின் 57 (1) ஆம் பிரிவின் கீழ் அவரை கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

1986 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி காலத்தில் ஜெனரல் உடுகம இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இராணுவ அதிகாரியொருவரை இராணுவ நீதிமன்றில் நிறுத்துவது இது முதல்தடவையல்ல அங்கு வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

யுத்த குற்றங்கள் தொடர்பில் எங்குமே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படாத நிலையில் யாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் பாதுகாக்கமாட்டேன். தனக்கு தெரிந்த காரணங்களை கூறுவேன் என்று பி.பி.சி செய்தி சேவைக்கு தெரிவித்திருந்ததுடன் தன்னை கைது செய்யுமாறும் அவரே கூறியிருந்தார்.

அது மட்டுமன்றி காணி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இந்தியாவில் ஜெனரல் ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டம், சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு இராணுவத்தை அரசியல் மயப்படுத்தவேண்டாம்" என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr