
ஐக்கிய தேசிய கூட்டணி என்ற, எதிர்கட்சிக் கூட்டணிக்கு இடையில் பிளவை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோக்கத்தில் ஐக்கிய தேசிய கூட்டணியானது யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளமையை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.
யானைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானம், ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் தற்போது உள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் போன்றோருடனும், சிங்கள கட்சிகளுடனும் இணைந்து பேச்சு நடத்தியதன் பின்னரே மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
எனினும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர் நிஷாம் காரியப்பர், இந்த தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சியின் சுயநலத்துக்காக மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, ஏனைய கட்சிகளின் சுயகௌரவத்தை அழிக்கும் எண்ணத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற அடிப்படையிலும், அதிக வாக்குகளை கொண்ட கட்சி என்ற அடிப்படையிலுமே யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து, அரசாங்கம் இலாபம் பெற முயற்சி மேற்கொண்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்..
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
7 ஆண்டுகள் முன்பு




0 கருத்துகள்:
கருத்துரையிடுக