இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தியறிக்கை

JKR  சனி, 13 பிப்ரவரி, 2010


அன்னிய துருப்புகள்
அன்னிய துருப்புகள்

படை நடவடிக்கையில் தலிபான்கள் பலி - ஆப்கான் தளபதி

ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் ஆப்கான் மற்றும் நேட்டோ படைகள் இணைந்து நடத்தி வரும் தாக்குதல் நடவடிக்கையில் குறைந்தப்பட்சம் 20 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் பலமாக இருக்கும் ஹெல்மாண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள மார்ஜா நகரத்தில் இடம்பெற்ற பெரும் தாக்குதலின் போது இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஜெனரல் ஷேர் மொஹமது சசாய் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் 11 பேர் பிடிப்பட்டு, துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கான, அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஆப்கான் துருப்புகள் இணைந்து நடத்தி வரும் இந்த நடவடிக்கை இது வரையில் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக தெற்கு ஆப்கானிஸ்தானில் இருக்கும் நேட்டோ படைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் நிக் கார்டர் தெரிவித்துள்ளார்.


சூடான் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பம்

சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர்
சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர்

சூடானில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிகாரபூர்வ பிரச்சாரங்கள் ஆரம்பமாகியுள்ளன. கடந்த 1986 ஆம் ஆண்டிற்கு பின்னர் நாடாளுமன்ற தேர்தல்கள் நடப்பது இதுவே முதன்முறை.

அதிபர் தேர்தலில் முப்பது ஆண்டுகளாக பதவியில் இருக்கும் தற்போதைய அதிபர் ஒமர் அல் பஷீர் அவர்களுடன் சேர்த்து 11 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பஷீர் அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சூடானில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றங்கள் சுமத்தப்பட்ட அதிபர் பஷீருக்கு தேர்தல் வெற்றி ஆதரவாக இருக்கும் என பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

தெற்கு சூடான் நாடாளுமன்றம் மற்றும் அதிபரை தேர்தெடுப்பதற்குமான தேர்தலும் நடைபெறுகிறது.


அமெரிக்க துப்பாக்கி சூட்டில் மூன்று மாணவர்கள் பலி

துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் பலி
துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் பலி

அமெரிக்காவின் அலாபமா மாநிலத்தில் பல்கலைக்கழகமொன்றில் மூன்று மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரியல் துறை பேராசிரியை ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்தனர்.

பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த கூட்டமொன்றின் போது எமி பிஷப் என்ற இந்த பேராசிரியர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக அலாபமா அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் பேராசிரியருக்கு பதவி உத்தரவாதத்தை வழங்கும் விதமான பதவி உயர்வு ஒன்று முன்னர் மறுக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.


இருபது இருபது கிரிக்கெட்டில் விளையாட ஆப்கான் அணியினர் தகுதி

ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள்
ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள்

இருபது இருபதுஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. துபாயில் இடம்பெற்ற போட்டியில் இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட் அணியை வெற்றி கொண்டு ஆப்கானிஸ்தான் அணி தகுதியடைந்துள்ளது.

பெரும்பாலான ஆப்கானிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தானில் அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் போது கிரிக்கெட் விளையாட கற்றுகொண்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் சர்வதேச கிரிக்கெட் அடுக்கில் ஐந்தாம் அடுக்கில் இருந்தனர் ஆப்கானிஸ்தான் அணியினர். இப்போது பெற்றுள்ள வெற்றி மூலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறும் போட்டியில் உலகின் தலைசிறந்த அணிகளுடன் ஆப்கானிஸ்தான் அணியினர் விளையாடவுள்ளனர்.

செய்தியரங்கம்
புனேவில் குண்டுவெடிப்பு
புனேவில் குண்டுவெடிப்பு

புனே குண்டு வெடிப்பில் பலர் பலி

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தார்கள். இதில் ஒருவர் வெளிநாட்டவர். முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

புனேயின் ஓஷோ ஆஸ்ரமம் அருகே உள்ள ஜெர்மன் பேக்கரியில் இந்த வெடிச்சம்பவம் ஏற்பட்டது. அந்த இடம், வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் கூடும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. சபாட் ஹவுஸ் அதற்கு மிக அருகில் உள்ளது.

சனிக்கிழமை மாலை என்பதால் அந்த இடத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்ததாகத் தெரிகிறது. மாலை 7.15 மணியளவில் பெருத்த சத்தத்துடன் ஜெர்மன் பேக்கரியில் வெடிச் சம்பவம் ஏற்பட்டது. அதன் தாக்கத்தால், பலர் பேக்கரிக்குள் இருந்து வெளியில் தூக்கியெறியப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் சம்பவம், பயங்கரவாதத் தாக்குதல் என்று இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார். வெளிநாட்டினரைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும், உள்துறைச் செயலர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய புனே நகர துணை போலீஸ் கமிஷனர் ராஜேந்திர சோனாவானே, பூர்வாங்கத் தகவல்கள் மூலம், குண்டுவெடிப்பு என சந்தேகிப்பதாகத் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினரும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதுபற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலில் காஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட சம்பவம் எனக் கூறப்பட்டது. ஆனால், ஜெர்மன் பேக்கரியில் உள்ள சிலிண்டர்கள் அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவருவதாக மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் அசோக் சவாண் தெரிவித்தார்.


சரத் பொன்சேகாவை விடுவிக்க பெளத்த பீடாதிபதிகள் கோரிக்கை

சரத் பொன்சேகா
சரத் பொன்சேகா

இலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரணி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமாகிய சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு நாட்டில் உள்ள நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன ஆகிய பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்திருக்கின்றார்கள்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக வரும் 18 ஆம் திகதி கண்டியில் மாநாடு ஒன்றிற்கு நான்கு பௌத்த பீடாதிபதிகளும் அழைப்பு விடுத்திருக்கும் நிலையிலேயே சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னின்று செயற்பட்ட சரத் பொன்சேகாவுக்கும், ஜனாதிபதிக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடானது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கின்றது என்பதையும் பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.


இந்தியாவுடன் நல்லுறவு பேணுவது அவசியம் - பாகிஸ்தான் அதிபர்

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி

பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராட இந்தியாவுடன் நல்ல உறவுகளைப் பேணவேண்டியது அவசியம் என்று பாகிஸ்தான் அதிபர் அசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.

இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இந்த மாதத்தின் பிற் பகுதியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இப் பேச்சுக்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என சர்தாரி கோரியுள்ளார். இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை இஸ்லாமாபாத்தில் அவர் சந்தித்த பிறகு அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத்த தாக்குதல்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் தடைபட்டன. இத்தாக்குதல்களுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொயிபா மீது இந்தியா பழி சுமத்தியது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr