
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் குற்றச்சாட்டுக்கு நோர்வே தூதரகமும் அமெரிக்கத் தூதரகமும், அளித்த மறுப்பை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு நோர்வேயும் அமெரிக்காவும் நிதியுதவிகளை வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை குறித்த இரண்டு நாடுகளின் தூதரகங்களும் கடுமையான தொனியில் நிராகரித்திருந்தன. அத்துடன் அந்த தூதரகங்கள் இரண்டும், நிராகரிப்பு ஆவணத்தை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கையளித்திருந்தன.
இந்தநிலையில் குறித்த நிராகரிப்புகள் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரோஹித்த போகல்லாகம, இந்த விடயத்தை தொடர்ந்தும் விவாதிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சரத் பொன்சேகாவை, கைது செய்தமைக்காக தகுந்த காரணங்கள் உள்ளதாக ரோஹித்த போகல்லாகம, நேற்று வெளிநாட்டு ராஜதந்திரிகள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய இராணுவச் சட்டப்படி, இராணுவ சட்டம் இலக்கம் 17,1949 ஆம் ஆண்டுக்கமைய சரத் பொன்சேகா, கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தில் இருந்து விலகி ஒன்றரை வருடங்களுக்கு இராணுவ சட்டத்தின் மூலம் வீரர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என்ற அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், இராணுவ நீதிமன்றத்தில் பிரதிவாதியான சரத் பொன்சேகா தமக்காக வழக்காட எத்தனை சட்டத்தரணிகளையும் நியமிக்கலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது இராணுவ நீதிமன்ற ஒழுங்கில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
7 ஆண்டுகள் முன்பு




0 கருத்துகள்:
கருத்துரையிடுக