
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் கொழும்புக்கான பேச்சாளர் கோடன் வைஸ் வெளியிட்ட தகவலை, இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல, இந்த தகவல் முற்றுலும் பொய்யானது என குறிப்பிட்டுள்ளார். கோடன் வைஸ், ஏபிசி செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே தமது தகவலை நம்பத்தகுந்த தரப்புக்களை கோடிட்டு வெளியிட்டிருந்தார்.
இதனை இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை பிழையான வழியில் இட்டுசெல்லும் செய்தி எனக்கூறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை மறுத்துள்ள லக்ஸ்மன் ஹுலுகல்ல, இவ்வளவு தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான வாய்ப்புகள் இருக்கவில்லை என்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வாறு பொதுமக்களை சித்திரவதை செய்தார்கள் என்பதை தாம் ஊடகவியலாளர்களுக்கு காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகமையும் கோடன் வைஸின் தகவலை மறுத்துள்ளார்.
கோடன் வெய்ஸ்சும் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவராக இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரஜையான கோடன் வெய்ஸ் 14 ஆண்டுகளுக்கு பின்னர், தமது ஐக்கிய நாடுகள் சபையின் பதவியை துறந்து வீடு சென்ற பின்னர் முதல் தடவையாக இலங்கை தொடர்பாக சுதந்திரமான தமது தகவலை வெளியிட்டுள்ளார்.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
7 ஆண்டுகள் முன்பு




0 கருத்துகள்:
கருத்துரையிடுக