
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய அனுமதிப்பதில்லை எனக் கட்சி தீர்மானித்துள்ளது.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனட் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் சகலருக்கும் சந்தர்ப்பம் வழங்கும் வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், சில முக்கியஸ்தர்களின் பிள்ளைகள், சகோதரர்கள் உள்ளிட்டோர் தேர்தலில் களமிறங்க உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
7 ஆண்டுகள் முன்பு




0 கருத்துகள்:
கருத்துரையிடுக