
யாழ். மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் அனைத்து ஓட்டோக்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பெற்றோலுக்கான மானியம் வழங்கப்படவுள்ளது.
முன்னதாக கடந்த மாத இறுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்த யாழ். மாவட்ட ஓட்டோ உரிமையாளர் சங்கத்தினர் தமது தேவைகள் கோரிக்கைகள் குறித்து தெரியப்படுத்தியிருந்தனர். இதன்போது பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஓட்டோக்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்களினால் விடுக்கப்பட்டிருந்தது. இக்கோரிக்கை தொடர்பாக அதிக அக்கறை செலுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் செயற்பட்டுவரும் சமுர்த்தி வங்கிகள் ஊடாக பெற்றோல் மானியம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
7 ஆண்டுகள் முன்பு




0 கருத்துகள்:
கருத்துரையிடுக