இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

15 000 கறவை பசுக்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி

JKR  வெள்ளி, 19 மார்ச், 2010

Loogix.com. Animated avatars. அவுஸ்திரேலியாவிலிருந்து 15 ஆயிரம் கறவை பசுக்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கால்நடை அபிவிருத்தியமைச்சின் செயலாளர் சுனிமல் சேனாரத்ன தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக 4 ஆயிரம் கறவைப் பசுக்கள் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இலங்கைக்குக் கொண்டு வரப்படுமெனவும் அவர் கூறினார்.
நமது நாட்டைச் சேர்ந்த ஒரு கறவைப் பசுவானது நாளொன்றுக்கு 3 தொடக்கம் 5 லீற்றர் வரை பால் தரும் அதே சமயம் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பசுவானது நாளொன்றுக்கு 40 தொடக்கம் 50 லீற்றர் வரை பால் தரக்கூடியது.
இத்தகைய பசுக்களை நம் நாட்டுக்கு எடுத்து வருவதன் மூலம் தேவையான பால் உற்பத்தியை பெற்றுக்கொள்ள முடிவதுடன் வெளிநாட்டிலிருந்து பால்மா இறக்குமதியை நாளடவில் குறைப்பதே எமது இலக்காகும். அதற்கு ஏற்ற வகையில் 2015 ஆம் ஆண்டுக்குள் 15 ஆயிரம் கறவைப் பசுக்கள் இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளதென்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2005 ஆம் ஆண்டு முதல் 86 சதவீத பால் உற்பத்தி உள்நாட்டில் நடைபெறுவதுடன் 14 சதவீதமே இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr