இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பான் கீ மூனின் கூற்று ஐ.நா சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயல் இலங்கைக்கு எதிராக செயற்படுவது நியாயமற்றது - ஜீ.எல்.பீரிஸ்

JKR  வெள்ளி, 19 மார்ச், 2010

Loogix.com. Animated avatars. உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இலங்கை தொடர்பில் நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருப்பது ஐ.நா. சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயலாகுமென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்
.
சகல நாடுகளையும் சமமாக மதிக்க வேண்டுமென்பது ஐ.நா. சாசனத்தின் ஜீவநாடியாக உள்ளது. சிறிய நாடுகளின் பாதுகாப்புக்காகவே ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு எதிராக செயற்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாதென்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்கள் குழு அவசியமில்லையென வலியுறுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்புகள் தொடர்பாக ஆராய்வதெனின் 118 நாடுகளின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாமல் நிராகரிக்க முடியாது. சில நாடுகளின் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கான சாட்சியங்கள் இருந்தும் அந்த நாடுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இலங்கை பெற்றுள்ள வெற்றி இன்று சர்வதேச சவாலை எதிர்நோக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.
இதேவேளை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கும் இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிலைப்பாட்டுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளதாக நெருக்கடிகள் தொடர்பான சர்வதேச குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாகவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்கள் குழுவில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இன்னமும் தமிடிழக் கோட்பாட்டைக் கைவிடவில்லை.
ஆனால் இலங்கையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கொண்டிருக்கும் நிலைப்பாடு முற்றிலும் மாறுபாடானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் இவர்கள் இங்கு அரசியல் கட்சிகள் மூலம் மாத்திரமன்றி சிறு அமைப்புகள் ஊடாகவும் முயற்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr