இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சச்சினின் அதிரடி ஆட்டம் மும்பைக்கு 3-வது வெற்றி.

JKR  திங்கள், 22 மார்ச், 2010

மும்பை,​​ மார்ச் 22:​ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
மும்பையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.​ அடுத்து ஆடிய மும்பை 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

கொல்கத்தா அணியில் கிறிஸ் கெய்லும்,​​ கங்குலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.​ நிதானமாக விளையாடி ரன் குவித்த இந்த ஜோடி 11-வது ஓவரில் பிரிந்தது.​ 34 பந்துகளில் 31 ரன் எடுத்திருந்த கங்குலி,​​ ஜாகீர்கான் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து ​ கெயிலுடன் ஓவைஸ் ஷா ஜோடி சேர்ந்தார்.​ அவர் தனது பங்குக்கு 31 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்

கெய்ல் 60 பந்துகளில் 2 சிக்ஸர்,​​ 7 பெüண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் அந்த அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தில் ஈடுபடாததால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

மும்பை அணியில் தவானும்,​​ கேப்டன் சச்சினும் களம் இறங்கினர்.​ தவான் 23 ரன்களில் வெளியேறினார்.

சச்சின் அபாரமாக விளையாடி 48 பந்துகளில் 71 ரன் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.​ இதில் 10 பெüண்டரிகளும் அடங்கும்.

திவாரி 30 ரன்களும்,​​ ராஜகோபால் சதீஷ் 21 ரன்களும் ​(அவுட் இல்லை)​ எடுத்தனர்.

18.3 ஓவர்களில் மும்பை 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.​ ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்தது.

கொல்கத்தா அணி 5 ஆட்டங்களில் 2 வெற்றி,​​ 3 தோல்விகளை அடைந்துள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr