இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தியறிக்கை

JKR  புதன், 17 மார்ச், 2010


 

இரத்தம் தெளித்து அரசாங்கத்துக்கு சாபமிடும் போராட்டக்காரர்கள்
இரத்தம் தெளித்து அரசாங்கத்துக்கு சாபமிடும் போராட்டக்காரர்கள்
தாய்லாந்தில் இரத்தம் தெளித்து சாபமிடும் போராட்டம்
தாய்லாந்தில் தேர்தலை நடத்தக் கோரி மூன்றாவது நாளாக போராட்டங்களை நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள், தலைநகர் பாங்கொக்கில் அரசாங்க தலைமை அலுவலகம் மற்றும் பிரதமரின் கட்சியின் அலுவலகம் ஆகியவற்றுக்கு வெளியே தமது இரத்தத்தை தெளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களால் தானமாக வழங்கப்பட்ட இரத்தத்தை பிளாஸ்டிக் போத்தல்களில் வைத்திருந்து, அரசாங்க இல்லத்தின் வாசலில் தெளித்து, வடியவிட்டு அரசாங்கத்துக்கு அவர்கள் சாபமிட்டார்கள்
.
தாய்லாந்தின் தற்போதைய அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்படாததால், அது, சட்டவிரோதமாகவே பதவிக்கு வந்துள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.


இஸ்ரேலிய படையினருடன் பாலத்தீன இளைஞர்கள் மோதல்
பாலத்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள்
பாலத்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள்
கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்லாமிய புனித தலம் ஒன்றுக்கு அருகே உள்ள பழைய நகரில், யூத வழிபாட்டிடம் ஒன்றை மீண்டும் திறப்பதற்கு எதிரான போராட்டத்தை நடத்திய பாலத்தீன இளைஞர்கள், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருடன் மோதியிருக்கிறார்கள்.
கல்லை வீசியடிக்கும் பாலத்தீனர்களை கட்டுப்படுத்துவதற்காக கைக்குண்டை வீசும் துப்பாக்கி தாங்கிய ஆயிரக்கணக்கான பொலிஸாரை இஸ்ரேல் அங்கு நிறுத்தியது.
ஆத்திரத்தை வெளிப்படும் நாளாக ஹமாஸ் அமைப்பால் பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தை முன்னிட்டு, காசாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
கிழக்கு ஜெரூசலத்தில் குடியேற்றக்காரர்களுக்காக ஆயிரத்து அறுநூறு புதிய வீடுகளை அமைக்கும் இஸ்ரேலின் திட்டம் காரணமாக எழுந்த பதற்றத்தை அடுத்து அமெரிக்காவின் மத்திய கிழக்குக்கான தூதுவர் ஜோர்ஜ் மிச்சேல் அவர்கள், இஸ்ரேலுக்கான தனது விஜயத்தை ஒத்திவைத்துள்ளார்.


இராக் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி
இராக்கில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள்.
பாக்தாதுக்கு தெற்கே முஷ்ஷயப் நகரில் இந்த இரு குண்டுகளும் ஒரு நிமிட இடைவெளியில் வெடித்ததன.
இந்த குண்டை பயணிகள் செல்லும் மினிபஸ் ஒன்றின் கீழே குண்டுதாரிகள் பொருத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


அமெரிக்கத் தாக்குதலில் 6 பேர் பலி
அமெரிக்க ஆளில்லா தாக்குதல் விமானம்
அமெரிக்க ஆளில்லா தாக்குதல் விமானம்
வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களில் தீவிரவாத சந்தேக நபர்கள் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கான் எல்லைக்கு அருகே உள்ள மிரன்ஷா கிராமத்தில் உள்ள ஒரு வளாகத்தில் ஆளில்லா விமானங்களில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
தலிபான் மற்றும் அல்கைதா தீவிரவாதிகளின் வலுவான இடமாக அந்த இடம் அறியப்பட்டதாகும்.
கொல்லப்பட்டவர்களின் அடையாளம் உடனடியாக தெரியவில்லை.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr