இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தியறிக்கை

JKR  வியாழன், 18 மார்ச், 2010


 

ஜெர்மனியின் ஆட்சித் தலைவி ஆங்கேலா மெர்க்கல்
ஜெர்மனியின் ஆட்சித் தலைவி ஆங்கேலா மெர்க்கல்
யூரோ நாணயத்தின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: அங்கேலே மெர்க்கெல்
ஐரோப்பிய ஒற்றை நாணயமான யூரோவின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் பொருட்டு கடுமையான நடவடிக்கைகளைக் கைகொள்வது பற்றியும் யூரோ நாணயத்தைப் புழங்கும் 16 நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என ஜெர்மனி வலியுறுத்துகிறது.
யூரோ நாணயத்தைப் புழங்கும் ஒரு நாடு தொடர்ந்து விதிகளை மீறிவந்தால், அந்த நாட்டின் உறுப்புரிமையை ரத்து செய்வதையும் கடைசி வழியாக யூரோ நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஜெர்மன் சான்செல்லர் அங்கேலா மெர்க்கெல் கூறியுள்ளார்.
கிரேக்கம் தற்பொது எதிர்கொண்டுவரும் நிதி நெருக்கடிதான் யூரோ நாணயம் இதுவரை சந்தித்ததிலேயே மிகப் பெரிய சவால் என மெர்க்கெல் வருணித்துள்ளார்.
யூரோ நாணயத்தின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக நினைத்துப்பார்த்திராத ஒரு விஷயத்தைப் பரிசீலிக்கவும் ஜெர்மனி தயார் என்பதை மெர்க்கெலின் பேச்சு காட்டுவதாக பெர்லினில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.


யுவானின் மதிப்பை உயர்த்தச் சொல்லி சீனா மீது அழுத்தம்
யுவான் நோட்டுக்கள்
யுவான் நோட்டுக்கள்
சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பு குறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் கூறியதை அடுத்து சீனா யுவானின் மதிப்பை உயர்த்தும் அழுத்தத்தை எதிர்நோக்குகிறது.
யுவானின் பெறுமதி மறு மதிப்பீடு செய்யப்படாவிட்டால், சீனாவிற்கெதிராக தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்க செனட் சபை பரிசீலித்துக்கொண்டிருக்கிறது.
யுவானின் மதிப்பு குறைவாக இருப்பது சீன ஏற்றுமதியாளர்களுக்கு உதவுகிறது; ஆனால் சீனாவோ சீன நாணயப் பெறுமதியின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்படுவதாக கூறுகிறது.


யுகாண்டா புராதன சமாதி தீக்கிரை
தீக்கிரையான புராதன சமாதிகள்
தீக்கிரையான புராதன சமாதிகள்
யுகாண்டா நாட்டின் பாரம்பரிய ராஜாங்கங்களில் மிகப்பெரியதான புகாண்டாவின் பண்டைய மன்னர்கள் நான்கு பேருடைய புராதன அடக்கஸ்தலங்கள் தீயால் அழிக்கப்பட்ட இடத்தை தற்போதைய புகாண்டா மன்னர் சென்று பார்வையிட்டுள்ளார்.
யுகாண்டா தலைநகர் கம்பாலா அருகேயுள்ள இந்த இடம் தீக்கிரையானதை ஒட்டி ஒரு வார காலம் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கசூபி சமாதிகள் என்று அழைக்கப்பபடும் இந்த கூரை வேய்யப்பட்டக் கட்டிடங்கள் ஐ.நா.மன்றத்தின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் உலக பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இடத்துக்கு யுகாண்டாவின் அதிபர் யொவேரி முஸெவேனி வருவதை ஆத்திரம்கொண்ட மக்கள் தடுத்தபோது பாதுகாப்புப் படையினர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


இந்தியாவில் 'பாலியல் வலயமைப்பை நடத்திய' சாமியாருக்கான பொலிஸ் காவல நீட்டிப்பு
சர்ச்சைகுரிய சாமியார் ஷிவ் முரத் துவேதி
சர்ச்சைகுரிய சாமியார் துவேதி
இந்தியாவில், நூற்றுக்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான விலைமாதர்களை நாடெங்கிலும் வைத்து ஒரு பெரிய பாலியல் தொழில் வலையமைப்பை நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படும் ஒரு இந்து சாமியாரை மேலும் விசாரிக்க, அவரை காவலில் வைத்திருக்க இந்திய நீதிமன்றம் ஒன்று காவல் துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வலையமைப்பு குறித்த தகவல்களை முழுதுமாக வெளியே கொண்டுவர தங்களுக்கு மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாக போலிஸ் தரப்பு வழக்குரைஞர் ஒருவர் தலைநகர் டெல்லி நீதிமன்றம் ஒன்றில் கூறினார்.
சாமியார் என்று தன்னைத்தானே வர்ணித்துக்கொள்ளும் ஷிவ் மூரத் த்விவேதி தான் தவறு செய்ததாகக் கூறப்படுவதை மறுக்கிறார்.
சட்டவிரோத பாலியல் தொழிலை நடத்தியதான குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr