இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தியரங்கம்

JKR  வியாழன், 18 மார்ச், 2010


 

வன்னிப் பகுதியில் பான் கீ மூன்
போருக்கு பிறகு வன்னிப் பகுதிக்கு பான் கீ மூன் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட படம்
இலங்கையின் இறையாண்மையில் தலையிடவில்லை:பான் கீ மூன்
இலங்கையில் அண்மையில் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தின் போது நடந்தாகக் கூறப்படும் தவறுகளுக்கு பொறுப்பு சுமத்தும் ஒரு வழிமுறைகள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க தன்னால் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படவுள்ளது
இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாக ஆகாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையின் அரச படைகளால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு அங்கு தான் விஜயம் செய்த போது, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையை ஒட்டியே இந்த இந்த வல்லுநர் குழு அமைக்கப்படுவதாகவும் பான் கீ மூன் கூறுகிறார்.
தன்னால் அமைக்கப்படும் இந்த வல்லுநர் குழு தங்களது சர்வதேச அனுபவத்தின் அடிப்படையில், இப்படியான விடயங்கள் தொடர்பில் பொறுப்பு சுமத்தும் வழுமுறைகள் தொடர்பிலான தராதரங்கள், அளவுகோல்கள், வரையறைகள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வல்லுநர் குழு தங்களது ஆலோசனகளை, வேறு யாரிடமுமின்றி நேரடியாகவே தன்னிடம் தெரிவிப்பார்கள் என்று கூறுயுள்ளார்.
இதனிடையே ஐ நா வின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ இலங்கை அரசு மற்றும அதன் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் இலங்கை செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


பொன்சேகா மீதான இரண்டாவது வழக்கு விசாரணையும் தொடங்கியது
ஜெனரல் சரத் பொன்சேகா
ஜெனரல் சரத் பொன்சேகா
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான இரண்டாவது இராணுவ விசாரணை இன்று ஆரம்பமானவுடன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாயன்று முதல் விசாரணையும் இதேபோல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. முன்பு திட்டமிட்டதிருந்ததுபோல இந்த இரண்டு இராணுவ விசாரணைகளையும் மூன்று மேஜர் ஜெனரல்கள் அடங்கிய ஒரே இராணுவ நீதிபதிகள் குழுவே விசாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தை தாங்கள் அறிய விரும்பியதாக இந்த நீதிபதிகள் குழு தெரிவித்ததாக பொன்சேகா சார்பாக வாதிடும் வழக்கறிஞர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இராணுவத்துக்கு ஆயுதக் கொள்வனவு செய்வது தொடர்பான விதிகளை பொன்சேகா மீறியிருந்தார் என்பது தொடர்பான இன்றைய வழக்கு குற்றப்பத்திரிகை வாசிக்கப்படுவதற்கு முன்பே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே அரசியல் வேலைகளில் ஈடுபட்டார் என்பது தொடர்பான முதல் வழக்கு, நீதிபதிகள் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் 6ஆம் தேதிவரை ஒத்ததிவைக்கப்பட்டுள்ளது.


கொழும்பு காவல் நிலையங்களில் தமிழில் புகார் செய்ய வசதி ஏற்பாடு
கொழும்பு காவல் நிலையங்களில் தமிழில் புகார் செய்யலாம்
கொழும்பு காவல் நிலையங்களில் தமிழில் புகார் செய்யலாம்
இலங்கைத் தலைநகர் கொழும்பின் காவல் நிலையங்களில் பொதுமக்கள் முதல் தடவையாக தமிழில் புகார் தெரிவிக்க வழிவகை செய்யும் விசேடப் பிரிவுகள் அமைக்கப்பட்டுளன.
சாதாரணமாக தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு இலங்கைப் பிரஜை கொழும்பு காவல் நிலையம் ஒன்றில் புகார் தெரிவிக்கவோ வாக்குமூலம் வழங்கவோ வேண்டுமானால் அவர் சிங்களம் தெரிந்தவர் ஒருவரைக் கூட்டிக்கொண்டுபோய் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும் என்ற நிலைதான் இத்தனைக் காலமும் இருந்துவந்தது.
இலங்கை பொலிஸார் பெரும்பாலும் சிங்களம் மட்டும் அறிந்தவர்களாகவே இருந்துவருகின்றனர் என்பது இதன் காரணம்.
தாங்கள் சொல்வதைக் கொண்டு எழுதப்பட்ட ஆவணத்தில் என்ன இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியாத நிலை தமிழர்களுக்கு இருந்துவந்தது.
தமிழ் பேசக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கொழும்பின் நான்கு காவல் நிலையங்களில் விசேட சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது மற்ற மற்ற காவல்நிலையங்களுக்கும் பரவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சில இடங்களில் காவல் துறையில் சேர்ந்துள்ள தமிழர்களைக் கொண்டும். மற்ற இடங்களில் தமிழ் கற்றுக்கொடுக்கப்பட்ட சிங்கள காவலர்களைக் ஒண்டும் இச்சேவை வழங்கப்படவுள்ளது


மாயாவதியின் ஆடம்பரம் தொடர்பில் சர்ச்சை
பண மாலையுடன் மாயாவதி
பல லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் ஆன மாலையுடன் உத்திர பிரதேச முதல்வர் மாயாவதி
வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தை ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் லக்னோவில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடந்ததாக செய்திகள் கூறின. இந்த கொண்ட்டாட்டங்களில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியும், மாநில முதல்வருமான , மாயாவதிக்கு பல லட்சக்கணக்கணக்கான ரூபாய்கள் மதிப்புடைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களால் செய்யப்பட்ட மாலை ஒன்றும் அவரது ஆதரவாளர்களால் அணிவிக்கப்பட்டதாக வந்த செய்திகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த சர்ச்சை குறித்தும், தாழ்த்தப்பட்டவர்களின் விடிவுக்காகத் தொடங்கப்பட்டதாக கூறப்படும் , பகுஜன் சமாஜ் கட்சி, அதன் 25 ஆண்டுகால செயல்பாட்டில் சாதித்தவைகள் குறித்தும், இடது சாரி தலித் ஆய்வாளர் ஆதவன் தீட்சண்யா தமிழோசைக்கு அளித்த பேட்டியில், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்ததற்கு, அதன் நிறுவனர் கன்ஷிராம் ஒரு முக்கியமான காரணம், ஆனால் அதிகாரத்துக்கு வந்தபின்னர் மாயாவதியின் செயல்பாடுகள் அம்பேத்கார் வழிநின்று செயல்படவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு உவப்பானதாக இல்லை என்றார்.
குறிப்பாக அரசு செலவில் தனக்கும் பிற தலித் தலைவர்களுக்கும் சிலை வைக்கும் திட்டம் போன்றவை நீதிமன்றம், சுற்றுச்சூழலாளர்கள் போன்றவைகளின் எதிர்ப்பையே அவருக்கு பெற்றுத்தந்தது மேலும் இந்த சிலைவைப்புகளால், தலித் மக்களுக்கு என்ன பயன் என்பது தெளிவாகவில்லை என்றார்.
சாதி ஆதிக்கம் நிறைந்த உத்தரப்பிரதேசம் போன்ற ஒரு மாநிலத்தின் முதல்வராக ஒரு தலித் பெண் வருவதே குறியீட்டளவில் ஒரு சாதனையில்லையா என்று கேட்டதற்கு, அதை ஒரு சாதனையாகப் பார்க்கமுடியாது, ஏனென்றால், அவரது வெற்றியால், மாநிலத்தில் உள்ள சாதிய அடுக்குகள் குலைந்துபோய்விட்டதாகவோ, சமூகத்தில் சாதி மனப்பான்மை தளர்ந்துவிட்டதாகவோ கூற முடியாது என்றார்
ஆதவன் தீட்சண்யாவின் இந்த பேட்டியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கில் கேட்கலாம்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr