இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம்! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

JKR  ஞாயிறு, 21 மார்ச், 2010

யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 18ம் திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அம்மக்களின் உடனடித் தேவைகளுக்கான நிதி உதவியையும் வழங்கியிருந்தார்.

அதன் பின்னர் நேற்றைய தினம் (19) வவுனியா மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் அவர்கள் வவுனியா செட்டிக்குளம் பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களது தேவைகள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.
இன்றைய தினம் (20) அமைச்சர் அவர்கள் மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டார். இதன் பிரகாரம் மன்னார் கண்ணாட்டி பகுதிக்கு இன்று காலை சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் விவசாய மற்றும் ஜீவனோபாய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். அதன் பின்னர் குஞ்சிக்குளம் பகுதிக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் அவர்கள் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதுடன் அப்பகுதிக்கு அமைச்சர் அவர்கள் ஏற்கனவே வழங்கியிருந்த நிதியுதவிகளைக் கொண்டு அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டார்.
பின்னர் பரப்பாங்கண்டல் பகுதிக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் அவர்கள் அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க பரப்பாங்கண்டல் பெரியகுளம் விவசாய அமைப்பிற்கு இரண்டு இலட்சம் ரூபா நிதியுதவியையும் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரு இலட்சம் நிதியுதவியையும் சிறுகுளம் விவசாய அமைப்பிற்கு இரண்டு இலட்சம் நிதியுதவிiயும் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்கினார்.
இப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பின் 9ம் திகதியை நாம் வெற்றி விழாவாகக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கடந்த கால அழிவுகளிலிருந்து நாம் உடனடியாக மீள வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனக்கு போதிய பலம் இருந்தால் இப்பகுதியின் அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் வெகு விரைவாக மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
கடந்த கால கசப்பான அனுபவங்களை நாம் ஒரு பாடமாகவும் அனுபவமாகவும் கொள்ள வேண்டுமே தவிர அவற்றுக்காக நாம் யாரையும் பழிவாங்கக் கூடாது என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இப்பகுதி விவசாயத்துறை உட்பட அனைத்துத் துறைகளையும் முன்னேற்றித் தருவதாகவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் மன்னார் பேசாலை பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதி பொதுமக்களைச் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது அப்பகுதி மக்கள் அமைச்சர் அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இக்கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் அவற்றில் நிறைவேற்றக் கூடிய கோரிக்கைகளை நிறைவேற்றும் முகமாக நிதியுதவிகளை வழங்கினார்.
இதன் பிரகாரம் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாவும் மாதர் அபிவிருத்திச் சங்கத்திற்கு எழுபத்தைந்தாயிரம்; ரூபாவும் பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவும் பேசாலை கோவில் புனரமைப்பிற்கு இரண்டு இலட்சம் ரூபாவும் அகிலாண்டேஸ்வரி கோவில் புனரமைப்பிற்கு இரண்டு இலட்சம் ரூபாவும் கடற்தொழிலாளர் சங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவும் கோவில் பூசகரின் வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒரு இலட்சம் ருபாவும் நிதியுதவிகளாக உடன் வழங்கினார்.
ஏனைய கோரிக்கைகள் அனைத்தையும் வெகு விரைவில் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதன் பின்னர் சாவற்கட்டு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் சாவற்கட்டு கிலாரி விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டு மைதான புனரமைப்பிற்கு மூன்று இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கினார்.
இதன் பின்னர் அரிப்பு மற்றும் சிலாபத்துறை பகுதிக்கான விஜயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் செய்திருந்தார்.
இவ் அனைத்துப் பகுதிக்கு விஜயம் செய்திருந்த போது அப்பகுதி மக்கள் பெரும் ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளானதுடன் பின்தங்கிய தங்களது பகுதிகளுக்கு எந்தவொரு அரசியல் தலைவர்களும் இதுவரை வந்து அம்மக்களுடைய பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து பார்க்கவில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தங்களுடைய பகுதிகளுக்கு வந்து தங்களுடன் சமமாக அமர்ந்து தங்களுடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவதாகவும் நம்பிக்கை தருவதாகவும் தெரிவித்தனர். எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டுமல்லாது தொடர்ந்தும் தங்களுடைய ஆதரவு அனைத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கே உரித்தாகும் என அம்மக்கள் உறுதியுடன் தெரிவித்தனர்.







0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr