இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வவுனியாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஏமாற்றம்

JKR  சனி, 20 மார்ச், 2010

பாராளுமன்ற தேர்தல் பிரசாரப் பயணமாக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை வவுனியா நகரசபைக் கலாச்சார மண்டபத்திற்கு சென்றிருந்தார். பி.ப.3.00 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் போதிய மக்கள் இன்மையினால் கூட்டம் 4:30 மணிக்கே ஆரம்பமாகியது.


ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தனாயக்கவும் உடன் சென்றிருந்தார்.
கூட்டம் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படவில்லை என்று கட்சி அங்கத்தவர்களிடையே வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது. மண்டபத்தில் 80 வீதமான கதிரைகள் வெறுமையாக இருந்தன. சுமார் 200 வரையிலானவர்களே கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
கூட்டத்திற்கு வந்த‌ ரணில் ஏற்பாட்டாளர்களிடம் கடுமையான தொனியில் தமது கண்டன‌த்தினை வெளிப்படுத்தியமையினை அவதானிக்க முடிந்தது.
இக்கூட்டத்தில் பல்வேறுபட்ட உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களிற்கு நட்டஈடு வழங்குதல், அரச ஊழியருக்கு 10000 ரூபா ஊதிய உயர்வு , 500 ரூபாவில் யூரியா உரம் தரப்படும், சமுர்த்திக்கொடுப்பனவு கூட்டப்படும், இடம் பெயர்ந்தவர்களை உடன் மீள் குடியமர்த்தல் போன்ற வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
கூட்டத்தில் பேசியவர்கள் இலங்கை மீள் குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஸாட் பதியுதீன் அவர்கள் ஊழ‌ல் மிக்கவர் என அவரை விமர்சனம் செய்து பேசியிருந்தனர்.
எப்படியிருப்பினும் வவுனியா தேர்தல் கூட்டம் ரணிலிற்கு பெரும் ஏமாற்றத்தினையே அளித்துள்ளது என்றே சொல்லலாம்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr