இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தியரங்கம்

JKR  சனி, 20 மார்ச், 2010


 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அதிகாரப் பகிர்வு வழியிலான தீர்வுத் திட்டத்துக்கு ஜனாதிபதி உடன்படுவார்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இலங்கை இனப் பிரச்சினைக்கு சமஷ்டி ஆட்சிமுறை வழியிலான தீர்வுத் திட்டத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடன்படுவார் என்று தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையில் கருத்து வெளியிட்டுள்ளார்
.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் “ ஸ்ட்ரைய்ட்ஸ் டைம்ஸ்” என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வுக்கு தாம் உடன்படமுடியாது என்று கூறியிருந்தார்.
இந்த கருத்து குறித்து இலங்கை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா அவர்களிடம் தமிழோசை கேட்டபோது, ஜனாதிபதி தெரிவித்ததாகக் கூறப்படும் அந்த பேட்டியை தாம் பார்க்கவில்லை என்றாலும், தமது கட்சியைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியல் சட்டத் திருத்தம் மற்றும் அதற்கு மேலதிகமான அதிகாரங்கள் அடங்கிய தீர்வை ஜனாதிபதியிடம் வலியுறுத்தி தாம் ஒரு இணக்கப்பாட்டை கண்டிருப்பதாகவும், அந்த இணக்கப்பாட்டிலிருந்து ஜனாதிபதி விலகுவார் என்று தாம் கருதவில்லை என்றும், நிச்சயம் அதைப் பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் கூறினார்.
ஆனால், போலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு தருவதற்கே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த பேட்டியில் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், இந்த நம்பிக்கைக்கு அடிப்படை இருக்கிறதா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், ஜனாதிபதி அவர்கள் தனது அபிப்பிராயங்களை இப்போது சொல்லியிருக்கலாம், ஆனால் தீர்வுத்திட்டம் என்று வரும்போது அவர் தங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்வார் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த பேட்டியை தமிழோசையில் நேயர்கள் கேட்கலாம்.


தமிழகத்தில் அரசாங்க வரவு செலவு அறிக்கை தாக்கல்
அமைச்சர் அன்பழகன்
தமிழக நிதி அமைச்சர் க.அன்பழகன் தற்போதைய திமுக அரசின் நான்காவது வரவு செலவு அறிக்கையினை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
அரசுக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு இலவசமாக்கப்படுதல், உடல் ஊனமுற்றோர் மாற்றுத் திறன் படைத்தோர் என அழைக்கப்பட்டு, அவர்கள் நலனுக்கென முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் தனித்துறை உருவாக்கப்படுதல், கரும்பு கொள்முதல்விலை டன்னிற்கு ரூபாய் 2,000ஆக உயர்த்தப்படுதல் ஆகியவை பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.
அண்மையில் திறந்துவைக்கப்பட்ட புதிய சட்டமன்ற வளாகத்தில் நடைபெறும் முதல் அமர்வே இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வி வளர்ச்சியில் தமது அரசு கொண்டுள்ள அக்கறை பற்றி குறிப்பிட்ட அமைச்சர் அன்பழகன், மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
புதிய வரிகள் எதுவும் இல்லை, பல்வேறு சமையல் பொருட்களின் மீதான வரிகளும் குறைக்கப்பட்டிருக்கின்றன.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இனி எதிர்வரும் மார்ச் 26 அன்றுதான் மீண்டும் அது கூடி பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும்.


வெலிக்கட சிறையில் ஆயுள் கைதிக்கு திருமணம்
வெலிக்கட சிறை
இலங்கையின் வெலிக்கட உயர் பாதுகாப்பு சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் கைதியான ராமையா ரவீந்திரன், சிறையதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகள் நல்லாசிகளுடன், சிறைக்குள்ளேயே தனது காதலியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
சிறையின் கண்காணிப்பாளரின் ஏற்பாட்டில் இந்த திருமணச் சடங்கு நடந்துள்ளது.
2000ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்துவரும் மணமகனான ராமையா ரவீந்திரனுக்கு 2004ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
எதேச்சதிகாரச் சட்டம் என்று தாங்கள் கருதும் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைதுசெய்யப்பட்டவர் இவர் என்று இவரது விடுதலைக்கு ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
'பயங்கரவாத' முத்திரை குத்தப்பட்டிருந்தாலும், ரவீந்திரன் செய்த குற்றம் என்பது தானும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேறு சிலரும் சேர்ந்து நடத்திய ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, நீர்த் தேக்கத் தொட்டி ஒன்றை சேதப்படுத்தியது தான் என்று அவரது விடுதலைக்காக குரல்கொடுத்துவரும் இடதுசாரி அரசியல்வாதி விக்ரமபாகு கருணரத்ன கூறுகிறார்.
ஆனால் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிசார் சார்பாகப் பேசவல்ல அதிகாரி ப்ரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.


திடீர் செல்வந்தர்களாகும் இந்திய கிராமவாசிகள்: ஓர் கண்ணோட்டம்
ஹெலிகொப்டர் ஊர்வலத்துடன் மகனுக்கு திருமணம் செய்துள்ளார் நொய்டா விவசாயி
இந்தியாவின் பெரிய நகரங்களை சுற்றவரவுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எல்லாம், தாம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த நிலங்களை விற்பதன் மூலம் வேகமாக பணக்காரர்களாக மாறிவருகிறார்கள்.
நகரமயமாக்கலின் தேவைகளை எதிர்கொள்வதற்காக நகரங்கள் தம்மை விஸ்தரித்துக் கொண்டிருக்க, புதிய வீடுகளெல்லாம் அவசர அவசரமாக உருவாகிக்கொண்டிருக்க, அவை அங்குள்ள பாரம்பரிய கிராமிய சமூகத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவருகின்றன.
இந்தியத் தலைநகர் டெல்லிக்கு அருகில் இருக்கின்ற நொய்டா என்னும் பகுதியில் தனது விவசாயப் பண்ணையை பெரும் விலைக்கு விற்ற விவசாயி ஒருவர் தனது மகனுக்கு ஹெலிகொப்டரை வாடகைக்கு அமர்த்தி கல்யாண ஊர்வலம் நடத்தியுள்ளார்.
இது தொடர்பான பெட்டகம் ஒன்றை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம.


புதுக்குடியிருப்பு மாணவிக்கு தேசிய மாணவர் வீர விருது
விருது வாங்கும் தனஞ்சிகா
இலங்கையில் வீரமக்கள் பொது மன்றம் என்ற அமைப்பினால் வழங்கப்படுகின்ற வீரம்செறிந்த மாணவர்களுக்கான தங்கப்பதக்க விருது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சொந்த இடமாகக் கொண்ட மாணவியான தனஞ்சிகா சின்னராசா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வன்னிப் பிரதேசத்தின் யுத்தச் சூழ்நிலையில் கடந்த வருடம் யுத்த மோதல்களில் சிக்கி வெவ்வேறு சம்பவங்களில் காயமடைந்த மூவரைக் காப்பதற்கு இவர் முயற்சி செய்திருந்தார். எனினும் அவரால் இருவரை மாத்திரமே காப்பாற்ற முடிந்திருக்கின்றது.
கொழும்பில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.என். பண்டார இவருக்கான விருதை வழங்கியுள்ளார்.
இது பற்றிய மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
 

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr