இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தியறிக்கை

JKR  சனி, 20 மார்ச், 2010

செய்தியறிக்கை
 

பான் கீ மூன்
ஐ.நா. தலைமைச் செயலர்
குடியேற்ற நடவடிக்கையை நிறுத்துங்கள்: இஸ்ரேலிடம் ஐ.நா. தலைமைச் செயலர் கோரிக்கை
அனைத்து வகையான குடியேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ளுமாறு இஸ்ரேலிடம் ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு தரப்புக்களைக் கொண்ட மத்திய கிழக்குக்கான சமாதான மத்தியஸ்தத்தின் சார்பில் மாஸ்கோவில் கருத்து வெளியிட்ட பான் கீ மூன்
, கைப்பற்றப்பட்ட கிழக்கு ஜெருசலத்தில் புதிய குடியிருப்புக்களை அமைக்கும் இஸ்ரேலின் திட்டத்தை கண்டித்துள்ளார்.
இந்தக் கருத்துக்கள், இஸ்ரேல் விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டுமென்ற சர்வதேச அழுத்தங்களை அதிகரித்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் சயேப் எரக்காத், பான் கீ மூனின் அறிக்கையை வரவேற்றுள்ளார்.
அதேவேளை இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் எவிக்டோர் லியபேர்மன் இந்தக் கருத்துக்கள் சமாதானத்திற்கான வாய்ப்புகளை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


சுவிட்சர்லாந்தில் தஞ்சம் மறுக்கப்பட்டவர்களை திருப்பியனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர விமான நிலையத்தில் நைஜீரிய நபர் ஒருவர் இறந்தது குறித்த விசாரணைகள் முடியாது இருக்கின்ற நிலையில், தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்களை திருப்பியனுப்புவதற்கான விமானங்களை சுவிஸ் அரசாங்கம் நிறுத்திவைத்துள்ளது.
போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டில் குற்றங்காணப்பட்டிருந்த அந்த நபரை லாவோஸுக்கு விமானத்தில் ஏற்றி அனுப்புவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட போது அவர் வீதியில் இறந்துபோனார்.
அவர் வன்முறையளராக நடந்துகொண்டதால், அவரை தாம் கட்டி வைத்திருந்ததாக பொலிஸார் கூறுகிறார்கள்.
அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகின்றது.


ஸ்ரெப்ரெனீச்சா படுகொலை தடுக்கப்படாததற்கு அமைதிகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் ஒருபால் உறவுக்காரர்களாக இருந்ததும் காரணம்: நேட்டோ தளபதி கருத்து
ஸ்ரெப்ரெனீச்சாவில் கொல்லப்பட்டிருந்தவர்களின் பெயர்ப் பட்டியல்
1995ம் ஆண்டில் இடம்பெற்ற ஸ்ரெப்ரெனீச்சா படுகொலைகளின் போது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த நெதர்லாந்து படைவீரர்களில் பலர், பகிரங்கமான ஒரு பால் உறவுக்காரர்களாக இருந்தமையும் அந்தப் படுகொலை தடுக்கப்படாமல் போனதற்கு காரணம் என அமெரிக்காவின் முன்னாள் நேட்டோ கமாண்டர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்தினை டச்சு அரசாங்கம் வன்மையாக நிராகரித்துள்ளது.
பனிப்போரின் பின்னரான காலப்பகுதியில், பகிரங்கமான ஒருபால் உறவு உட்பட பலவிடயங்களில் தாராளப் போக்கில் இராணுவம் விடப்பட்டிருந்ததால், படையினர் யுத்தத்திற்கு தயாராக இருக்கவில்லையென செனட் குழுவொன்றின் முன்னிலையில் ஜோன் ஷீஹான் கூறியிருந்தார்.
ஆனால் ஸ்ரெப்ரெனீச்சா படுகொலைகள் தொடர்பான எந்தவொரு விசாரணையும் ஒருபால் உறவுக்கார படைவீரர்களை தொடர்புபடுத்தி சிபாரிசுகளை வைக்கவில்லையென டச்சு பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.


யுவானின் பெறுமதியை அரசியலாக்க வேண்டாம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
தனது நாணயமான யுவானின் பெறுமானம் தொடர்பில் கசப்புணர்வுக்கு உள்ளாகியிருக்கும் சீனா, அது குறித்த விவகாரத்தை மேலும் அரசியலாக்க வேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
காரணமற்ற போர்களில் பணத்தை விரயம் செய்வதன் மூலம் அமெரிக்காவே தனது நாணய மதிப்பை வேண்டுமென்றே தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டிருக்கின்றது என்றும், சீனாவிடம் அந்தப் போக்கு கிடையாது என்றும், சீன அரசாங்க ஊடகங்கள் கடுமையான சொற்களைக் கொண்ட விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.
ஒபாமா அரசாங்கம் வணிக கட்டுப்பாடுகளை திணிக்கக் கூடாது என்று பல்தேசிய நிறுவனங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சீன வணிக அமைச்சு கோரியுள்ளது.
சீனா வேண்டுமென்றே தனது நாணயத்தின் மதிப்பை செயற்கையாக குறைத்து வைத்திருப்பதற்காக அதனை தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்க செனட்டர்கள் விரும்புகிறார்கள். அமெரிக்காவின் வணிக சமநின்மைக்கு இதுவே காரணம் என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr