இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புலம்பெயர் மக்கள் வடக்கின் அபிவிருத்திக்கு உதவினால் வரவேற்கத்தக்கது: இராணுவப் பேச்சாளர் _

JKR  செவ்வாய், 16 மார்ச், 2010

யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் வடக்கின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு உதவுவார்களேயானால் அது வரவேற்கக் கூடிய விடயமாகும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
வீரகேசரி இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,
கண்ணிவெடி அகற்றும் பிரதேசங்கள் தவிர ஏனைய பகுதிகளில் இரவு பகல் பாராமல் எந்த வேளையிலும் எந்தப் பகுதிக்கும் சென்று இலங்கையர்கள் சென்றுவரலாம்.
யுத்தம் காரணமாக வெளிநாடு சென்றவர்கள் இனம்,மதம்,மொழி பிரிவினைகளைத் தவிர்த்து வடக்கின் அபிவிருத்திக்கு உதவுவார்களேயானால் வரவேற்கத் தக்கதாகும்.

எவரும் எங்கும் செல்லலாம்
கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசங்கள் தவிர கிளிநொச்சி,முல்லைத் தீவு உள்ளிட்ட வடக்கின் எந்தப் பகுதிக்கும் எந்தவொரு இலங்கையரும் சுதந்திரமாகச் சென்றுவரலாம்.
ஆரம்ப காலங்களில் வடக்குக்கு செல்வதற்கு வரிகள் அறவிடப்படும். வரிப் பணத்தை கொடுத்த பின்னர் தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.
இலங்கையர்கள் ஒவ்வொருவருக்கும் அங்கு சென்றுவர முழுச் சுதந்திரம் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் கூட எமது அனுமதியின்றி செல்லலாம்.
வெளிநாட்டில் நிரந்தர வதிவிடம் பெற்றவர்கள் இலங்கையில் பிறந்திருந்திருப்பின் அவர்கள் செல்வதற்கும் நாம் தடைகள் எதுவும் விதிப்பதில்லை.
ஆனால் இலங்கையில் பிறக்காத வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே சென்றுவர முடியும். வெளிநாட்டவர்கள் தொடர்பில் நாம் சில நடைமுறைகளை பின்பற்றுகிறோம்" என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr