இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இதுவரை தேர்தல் வன்முறைகளின் எண்ணிக்கை 65 ஆகப் பதிவு : ஹஜ்மீர்

JKR  செவ்வாய், 16 மார்ச், 2010


எதிர்வரும் ஏப்ரல் 08ஆம் திகதி நடை பெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் தொடர்பாக இன்று வரை 65 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் ஹஜ்மீர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகள் குறித்து அவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே எமது இணையத்தளத்திற்கு இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இதுவரை 65 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பாரியளவில் 48 வன்முறைச் சம்பவங்களும் சிறியளவில் 17 சம்பவங்களும் பதிவாகியுள்ள அதேவேளை, 12 ஆயுதப் பிரயோகங்களும் பதிவாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராக 47 சம்பவங்களும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக 2 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 3 சம்பவங்களும் கட்சி அடையாளம் காணப்படாத 10 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
மத்திய மாகாணத்தில் 8, வடக்கு மாகாணத்தில் 5 , கிழக்கு மாகாணத்தில் 7, வடமத்திய மாகாணத்தில் 2, வடமேல் மாகாணத்தில் 7, சப்பிரகமுவ மாகாணத்தில் 17, ஊவா மாகாணத்தில் 5, மேல் மாகாணத்தில் 3 என்றவாறு இவை பதிவாகியுள்ளன.
தேர்தல் கண்காணிப்பு பணிகளில் மொத்தம் 185 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது வேட்பாளர்களின் 'கட் அவுட்'கள் குறித்தும் தபால் மூல வாக்களிப்பு தொடர்பிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவை தொடர்பிலான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr