இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தியரங்கம்

JKR  வெள்ளி, 19 மார்ச், 2010


 

மகிந்த- பொன்சேகா
மகிந்த- பொன்சேகா
‘பொன்சேகாவுக்கு நான் மன்னிப்பு அளிக்கப் போவதில்லை’ – மகிந்த ராஜபக்ஸ அறிவிப்பு
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி ஜெனெரல் சரத் பொன்சேகா ராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கும் நிலையில், அவருக்கு மன்னிப்பு அளிக்கும் விதத்தில் தான் தலையிடப்போவதில்லை என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்கள் எனக்கூறியுள்ள மகிந்த ராஜபக்ஷ, ஏற்கனவே ஆயிரக்கணக்கான இராணுவ சிப்பாய்களை நீதிமன்ற விசாரணைக்குட்படு்த்தியவர் பொன்சேகா எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொன்சேகாவை ஒரு ‘முட்டாள்’ எனவும் இலங்கை ஜனாதிபதி வர்ணித்துள்ளார்.
மேலும், நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி தீர்வை கொள்ளமுடியாது எனவும் கூறி அதனை நிராகரித்துள்ளார் ராஜபக்ஷ.


‘தமிழகத்தில் அரச அலுவலகங்களில் மத வழிபாடுகள் கூடாது’- நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற வளாகம்
சென்னை உயர்நீதிமன்ற வளாகம்
தமிழ்நாட்டில் இருக்கும் அரசு அலுவலக வளாகங்களுக்குள் மத வழிபாட்டுத்தலங்கள் அமைக்கப்படுவதையும் மத வழிபாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதையும் தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியைச்சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி முத்துராமன் என்பவர் தொடுத்திருந்த வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
அரசு அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில் மத வழிபாட்டை தடை செய்யும் ஆணை ஒன்றை 1993 ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை மீறி அரசு அலுவலக வளாகங்களில் மத வழிபாட்டுதலங்கள் அமைக்கப்படுவதாகவும் அரசு அலுவலகங்களில் கடவுளரின் படங்கள் வைத்து வணங்கப்படுவதாகவும், இதை நீதிமன்றம் தடுக்க வேண்டும் என்றும் முத்துராமன் கோரியிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு, தனது அலுவலகங்களில் மதவழிபாட்டு நடைமுறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்புகுறித்து, ஹிந்துத்வ அமைப்பான விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் வேதாந்தம் தமிழோசைக்கு அளித்த செவ்வியை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இந்தியாவில் பின் தங்கியுள்ள முஸ்லிம் இளைஞர்களை தொழிநுட்பக் கல்விக்கு தயார்படுத்தும் முயற்சி
இந்தியாவில் முஸ்லிம் சிறார்கள்
இந்தியாவில் முஸ்லிம் சிறார்கள்
இந்தியாவின் பெரிய சிறுபான்மையினமான முஸ்லீம்கள் சமூகப் பொருளாதரத்தில் பெரும்பாலும் பின் தங்கியே இருக்கிறார்கள்.
அவர்களின் கல்வி நடைமுறைகள் காரணமாகவே அவர்களால் அரசு துறைகளிலோ அல்லது தனியார் துறையிலோ வேலைவாய்ப்பைப் பெற முடிவதில்லை எனவும் கூறப்படுகின்றது.
இப்போது இஸ்லாமிய தன்னார்வ அமைப்பு ஒன்று , மிக வறிய குடும்பப் பின்னணியிலிருந்து வரும் முஸ்லீம் மாணவர்களுக்கு, இந்தியாவின் பிரசித்தி பெற்ற பொறியியல் கல்லூரிகளான, ஐ.ஐ.டி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் சேர்ந்து படிக்க பயிற்சி வழங்கத்தொடங்கியிருக்கிறது.
இது குறித்த பெட்டகத்தை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
 

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr