இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தியறிக்கை

JKR  வெள்ளி, 19 மார்ச், 2010


 

கேத்தரின் ஆஷ்டன் காசா விஜயம்
கேத்தரின் ஆஷ்டன் காசா விஜயம்
காசாவிலிருந்து இஸ்ரேலின் தென் பகுதி மீதி ராக்கெட் தாக்குதல்
மத்திய கிழக்கில் இருக்கும் பாலஸ்தீன பிரதேசமான காசாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் தாக்கி, இஸ்ரேலின் தென் பகுதியில் இருந்த விவசாய தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
காசா பகுதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கைக்கான தலைவர் கேத்தரின் ஆஷ்டன் அவர்களின் அபூர்வ விஜயம் நடந்துவரும் நாளன்று இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.
காசா- இஸ்ரேல் வரைபடம்
காசா- இஸ்ரேல் வரைபடம்

ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் காசா பிராந்தியம் வந்த பிறகு அந்த பகுதிக்கு செல்லும் மேற்குலகின் மூத்த அரசியல் தலைவர்களில் கேத்தரின் ஆஷ்டனும் ஒருவர்.
இஸ்ரேலின் கடுமையான தடைவிதிப்பு காரணமாக சிக்கலுக்கு உள்ளாகிவரும் காசா பிராந்தியத்திற்கான மனித நேய உதவிகள் செல்வதற்கான சாதியங்களை நேரடியாக ஆராய்வதற்கா கவே தாம் காசா வந்திருப்பதாக கேத்தரின் ஆஷ்டன் கூறினார்.
அதேசமயம் இஸ்ரேலின் விவசாய பண்ணை மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலை அவர் கண்டித்தார்.
இன்றைய ராக்கெட் தாக்குதலுக்கான இஸ்ரேலின் பதிலடி என்பது உரிய அளவில் மிகவும் வலுவானதாக இருக்கும் என்று இஸ்ரேலின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.


''கடன்களுக்கான வட்டியை செலுத்தியே அரச நிதி கரைகிறது''- கிரேக்க பிரதமர்
கிரேக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள்
கிரேக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள்
கிரேக்கம் நிதிநெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்கிவருகின்ற நிலையில், சர்வதேச நிதிச்சந்தைகளிலிருந்து கடன்களைப் பெறுவதற்காக தமது அரசாங்கம் அதிகளவு வட்டியை செலுத்திவருவதாக அந்நாட்டு பிரமர் ஜோர்ஜ் பாப்பண்ட்ரியோவ் தெரிவித்துள்ளார்.
புதிய சிக்கன நடவடிக்கைகளைக் கைக்கொண்டுவரும் கிரேக்க அரசின் பணம் அதிகளவு வட்டியினாலேயே கரைந்துபோவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாப்பண்ட்ரியோவ், தமது நாடு சர்வதேச நாணய நிதியத்தின் தயவை நாடவேண்டியேற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஆனால் கிரேக்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அழைக்கவுள்ளதாக அச்சுறுத்தி தனது கடன் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஐரோப்பா மீது அழுத்தம் கொடுக்க முனைவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


அணு ஆயுத கட்டுப்பாடு குறித்து ஹில்லாரி கிளிண்டன் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை
ஹில்லாரி கிளிண்டன்
ஹில்லாரி கிளிண்டன்
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அணு ஆயுத கட்டுப்பாடு குறித்தும், மற்ற பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹில்லாரி கிளிண்டன் மாஸ்கோவில் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறார்.
அணுஆயுத குறைப்பு ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாக, ஹில்லாரி கிளிண்டன் அவர்களின் குழுவில் இருக்கும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
அவரது மாற்றியமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி, ரஷ்ய பிரதமர் விளாடிமர் புடின் அவர்களை ஹில்லாரி கிளிண்டன் வெள்ளிக்கிழமை சந்திக்க இருக்கிறார்.
ரஷ்ய அதிபர் டிமித்ரி மெத்வதேவ் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜரி லாவ்ரவ் அவர்களுடன் ஹில்லாரி கிளிண்டன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளில் மத்திய கிழக்கு விவகாரமும் முக்கியமாக இடம்பெறுவதாக நம்பப்படுகிறது.


சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு - ஜேர்மனிய திருச்சபை மதகுருமார் கூடி விசாரிக்கத் தீர்மானம்
கத்தோலிக்க மதகுருமார்- ரோமில்
கத்தோலிக்க மதகுருமார்- ரோமில்
தற்போதைய போப் பெனடிக்ட் அவர்கள் முன்பு தலைமை தாங்கிய ஜெர்மானிய ரோமன் கத்தோலிக்க திருச்சபை மதகுருமார்கள் சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக ஜெர்மனியில் இருக்கும் கத்தோலிக்க மதத்தலைவர்கள் கூட இருக்கிறார்கள்.
குறிப்பாக போப் பெனடிக்ட் அவர்கள் மூனிச்சின் பேராயராக இருந்த 1970களில் நடந்த இத்தகைய துஷ்பிரயோக சம்பவம் ஒன்று தற்போது முதன்மைப் படுத்தி பேசப்பட்டு வருகிறது.
இந்த குறிப்பிட்ட புகார் எப்படி கையாளப்பட்டது என்கிற விவரங்கள் குறித்து போப் பெனடிக்டுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த சிறார் பாலியல் துஷ்பிரயோக விவகாரமானது போப்பாக பதவி வகிக்கும் ஒருவருடன் நேரடியாக தொடர்புபடுத்தி காட்டப்படுவது இதுவே முதல்முறை என்று பிபிசியின் மதவிவகாரங்களுக்கான செய்தியாளர் கூறுகிறார்.
 
 

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr