இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தியரங்கம்

JKR  ஞாயிறு, 21 மார்ச், 2010


''இலங்கை ஒரு கவலைக்குரிய நாடு''-பிரிட்டன் அறிக்கை
மிலிபான்ட் வவுனியா முகாம் மக்களுடன் -2009 இல்
மிலிபான்ட் வவுனியா முகாம் மக்களுடன் -2009 இல்
தமது பார்வையில் இலங்கை ஒரு கவலைக்குரிய நாடாகவே இருப்பதாக பிரிட்டன் கூறியுள்ளது.
அங்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு கடுமையான வன்செயல் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் அதில் இலங்கையை கவலை தருகின்ற நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அங்கு மனித உரிமைகள் நிலவரங்களில் முன்னேற்றம் காணப்படுகின்ற போதிலும், நிலைமை இன்னமும் மிகவும் மோசமானதாகவே இருப்பதாக அந்த அறிக்கை கூறுகின்றது.
மோசமான மனித உரிமை நிலவரங்களை பலவீனமான பொலிஸ் மற்றும் நீதித்துறை மேலும் மோசமாக்கியது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
மனித உரிமை நிலவரங்களை கண்காணிப்பதற்காக செயற்படுகின்ற இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசியல் ரீதியாகவோ அல்லது நிதி ரீதியாகவோ சுதந்திரமானது அல்ல என்றும், குற்றஞ்செய்பவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கும் கலாச்சாரத்தை கையாள அரசாங்கம் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்ற போதிலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் விடயத்தில் பொலிஸார் மேற்கொள்ளும் முறைகேடுகளை களைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி நடவடிக்கை- ரணில் விக்ரமசிங்க
வவுனியா பிரச்சாரத்தில் ரணில் விக்ரமசிங்க
வவுனியா பிரச்சாரத்தில் ரணில் விக்ரமசிங்க
பொதுத்தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், போரினால் இடம்பெயர்ந்து அவலப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை அவர்களது பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தப் போவதாக வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
போர் நடைபெற்ற இடங்களில் கண்ணிவெடிகளற்ற பிரதேசங்களிலும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களிலும் உடனடியாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போர் நடைபெற்ற பிரதேசங்களில் அழிவடைந்துள்ள சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்றும் ரணில் கூறினார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளில் சாட்சியமுள்ளவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். ஏனையவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.


அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை
கஜேந்திரக்குமார் பொன்னம்பலம்
கஜேந்திரக்குமார் பொன்னம்பலம்
ஆகில இலங்கை தமிழ் காங்கிரசின் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி திருகோணமலையில் தனது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, அந்தக் கூட்டமைப்லிருந்து வெளியேறி தனியாக இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றது.
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்கின்ற இந்த அமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தமிழ் மக்கள் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் ஒரே நாட்டுக்குள் இரண்டு தேசங்களின் கூட்டு என்பதை இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமாக தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி முன்மொழிந்துள்ளது.
இதேவேளை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒரு தரப்பாக இருந்து எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கோரியுள்ளது.


கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் அதிகரிக்கும் தேர்தல் வன்முறைகள்
வன்முறைத் தாக்குதலுக்குள்ளான வாகனமொன்று
வன்முறைத் தாக்குதலுக்குள்ளான வாகனமொன்று
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அநேகமான பிரதேசங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை முஸ்லிம் பிரதேசங்களில் அநேகமான தேர்தல் வன்முறைகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் ஏனைய பிரதேசங்களைப் பொறுத்த வரை குறிப்பிடத்தக்க அளவில் தேர்தல் வன்முறைகள் இல்லை என பொலிஸ் மற்றும் அரசியல் கட்சிகளின் தகவல்கள் கூறுகின்றன.
ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் இடம் பெற்று வரும் தேர்தல் வன்முறைகள் குறித்து அரசியல் கட்சிளைப் பொறுத்த வரை ஒரு கட்சி மீது மறு கட்சி குற்றம் சுமத்தும் நிலையே காணப்படுகின்றது
கைக்குண்டுத் தாக்குதல்கள் ,துப்பாக்கிச் சூடு ,தேர்தல் பிரச்சார வாகனங்கள் மீதான தாக்குதல்கள் என தொடரும் இப்படியான வன்முறைகள் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சததையும் ஏற்படுத்தியுள்ளது.
அங்கு 70க்கும் அதிகமான தேர்தல் வன்முறைகள் இதுவரை இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


''தேர்தல்கள் வந்து போனாலும் எமது பிரச்சனைகள் தொடர்கின்றன''- வவுனியா முகாம் மக்கள்
முகாம்களில் மக்கள்
முகாம்களில் மக்கள்

இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றத்தை எதிர்நோக்கி செட்டிகுளம் மனிக்பாம் முகாம்களில் எஞ்சியிருப்பவர்கள் தமக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.
இறுதிக்கட்டப் போரின்போது வன்னிப்பிரதேசத்தில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்து வந்து மனிக்பாம் முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள்.
இவர்கள் அனைவரையும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிடுவார்கள் என அரசு ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது.
எனினும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிவடையாத காரணத்தினால் மிள்குடியேற்ற நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், எனினும் இவர்களில் கணிசமான தொகையினரை மீளக்குடியர்த்திவிட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, வடபகுதியில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகியன நடந்து முடிந்துவிட்டன. தொடர்ந்து ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதியும் குறிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தச் சூழ்நிலையிலும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையென அவர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
 

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr