நேபாள முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா காலமானார் |
நேபாள முன்னாள் பிரதமர் காலமானார்
நேபாளத்தில் பத்து வருட கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கொண்டுவந்த சமாதான உடன்படிக்கையை மத்தியஸ்தம் செய்த அந்த நாட்டின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான கிரிஜா பிரசாத் கொய்ராலா அவர்கள் தனது 86வது வயதில் காலமானார்.
நான்கு தடவைகள் நேபாளத்தின் பிரதமராக பதவி வகித்த கொய்ராலா அவர்கள், பல வருடங்களாக சுவாச நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்
. மன்னர் கியானேந்திராவின் அளவுக்கு அதிகமான அதிகாரங்களை அவரிடம் இருந்து அகற்றுவதற்காக கொய்ராலா அவர்கள் 2006 இல் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து செயற்பட்டார்.
இரு வருடங்களின் பின்னர் தேர்தலில் வெற்றிபெற்ற மாவோயிஸ்டுகள் இந்து மன்னராட்சியை இல்லாது ஒழித்ததுடன், நேபாளத்தை மத சார்பற்ற குடியரசாக அறிவித்தார்கள்.
அயர்லாந்து கத்தோலிக்கர்களிடம் பாப்பரசர் மன்னிப்புக் கோரியுள்ளார்
பாப்பரசர் பெனடிக்ட் |
அயர்லாந்தின் கத்தோலிக்கர்களுக்காக எழுதப்பட்ட தனது கடிதத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியுள்ள அவர், '' நீங்கள் மிகவும் மோசமான துன்பத்தை அனுபவித்திருக்கிறீர்கள், நான் உண்மையிலேயே அதற்காக மன்னிப்புக்கோருகிறேன்'' என்று கூறியுள்ளார்.
இந்த துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுக்களை கையாள்வதில் அயர்லாந்து திருச்சபைத் தலைவர்கள் கடுமையான தவறுகளை செய்திருக்கிறார்கள் என்று கூறியுள்ள பாப்பரசர், நம்பிக்கையை நிலைநாட்ட இந்த விடயத்தில் வத்திக்கான நேரடியாகதத் தலையிடும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், அவரது இந்தக் கடிதமானது இந்த விவகாரத்தில் வத்திக்கானின் பொறுப்பை ஏற்கவில்லை என்றும், அயர்லாந்து திருச்சபையின் தலைவரை அது பதவி விலகக் கூறவில்லை என்றும் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு ஒன்று இந்த கடிதம் குறித்து ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் வேலை நிறுத்தம்
வேலை நிறுத்தக்காரர்களின் ஆர்ப்பாட்டம் |
ஞாயிறன்று ஆரம்பமான இந்தச் சேவை ரத்துக்கள் மூன்று நாட்களுக்குத் தொடரும்.
நிதி நெருக்கடி ஒன்றை தணிக்கும் நோக்கில் ஆட் குறைப்புச் செய்வதற்கான பிரிட்டிஷ் ஏர்வேஸின் திட்டம் ஒன்றை எதிர்த்தே இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்துக்கு பலமான ஆதரவைத் தந்துள்ளதாக இந்த வேலை நிறுத்தத்தை நடத்தும் தொழிற்சங்கம் கூறியுள்ளது, ஆனால், இந்த விமான சேவைகளின் ரத்துக்கு மத்தியிலும், தமது மொத்த வாடிக்கையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தமது பயணத்தை தொடர்வதற்கு தாம் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கென்யாவின் செனட் உறுப்பினர்களில் 50 வீதம் பெண்களாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை
கென்யாவிலுள்ள 10 பிராந்தியங்களும் தலா ஒரு ஆண் உறுப்பினரையும், ஒரு பெண் உறுப்பினரையும் செனட் சபைக்கு தெரிவு செய்ய வேண்டுமெனவும் மீதமுள்ள 10 இடங்களும் சிறுபான்மை சமூகங்களால் நிரப்பப்படவேண்டுமெனவும் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் சரியான வடிவம் குறித்து நீண்ட இழுபறி நிலவிவரும் பின்னணியில், இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு முன்பதாக, கென்யாவின் முழுமையான பாராளுமன்ற அங்கீகாரம் அதற்கு கிடைக்க வேண்டியதும் அவசியமாகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக