இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மும்பைத் தாக்குதல் : சிக்காகோ நீதிமன்றில் ஹெட்லி மீது நாளை விசாரணை

JKR  புதன், 17 மார்ச், 2010


பாகிஸ்தானைச் சேர்ந்த, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற டேவிட் ஹெட்லி (49) மீது மும்பைத் தாக்குதல், டென்மார்க் பத்திரிகை அலுவலகத் தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை நாளை சிக்காகோ நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

கடந்த அக்டோபர் மாத இறுதியில் இவர் அமெரிக்க உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் இவர் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி எனத் தெரிய வந்தது. மும்பை தாக்குதல் மற்றும் டென்மார்க் பத்திரிகை அலுவலகக் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் சம்பந்தப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் மீது அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை (18ஆந் திகதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அப்போது ஹெட்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இவருக்காக வக்கீல் ஜான்தீப் ஆஜராகிறார். ஹெட்லி மீது ஏற்கனவே 12 குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஆனால், இவர்மீது மும்பைத் தாக்குதல், டென்மார்க் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல போன்ற குற்றச்சாட்டுகளை மட்டும் நாளை நீதிமன்றில் ஒப்புக் கொண்டு இவர் மன்னிப்புக் கோருவார் என ஜான்தீப் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 12 வழக்குகளின் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டால் ஹெட்லிக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் ராண்டல் சாம் போர்ன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr