இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த அரசாங்கத்திற்கு விருப்பமில்லை : மங்கள சமரவீர

JKR  வியாழன், 18 மார்ச், 2010




சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்த அரசாங்கத்திற்கு விருப்பமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடாத்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த போதிலும், அதற்கு அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் குழாமொன்று தேர்தல் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அரசாங்கம் அதற்கு இன்னமும் அனுமதி வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டடிய போதிலும் எவ்வித பயனுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தேர்தல் மோசடிகளில் ஈடுபடத் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr