இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் வேட்பாளர்கள் மன்னாருக்கு விஜயம்-

JKR  வெள்ளி, 19 மார்ச், 2010

Loogix.com. Animated avatars. எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் மன்னார் மாவட்ட அமைப்பாளர் சுந்தர்ராஜ் (சிவசம்பு), மாதர் சங்கத் தலைவி இந்திரா என்கிற வரோனிகா மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள்
, ஆதரவாளர்கள் உள்ளடங்கலாக நேற்றையதினம் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது பெரியமடுப் பகுதியிலுள்ள ஈச்சலவக்க தமிழ் கிராமத்திற்கும் இடம்பெயர்ந்த மக்கள் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களுக்கும் விஜயம் செய்திருந்தனர். இதன்போது வாமதேவபுரம், கண்ணாட்டி(அடம்பன்) ஆகிய மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களுக்கு சென்றிருந்த புளொட் பிரதிநிதிகள், அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களின் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட விடயங்களை கேட்டறிந்து கொண்டனர்.
இதன்போது கருத்துரைத்த மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள், தாம் அண்மையில் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் தமக்கு நிவாரண உதவிகள் உரிய முறையில் கிடைப்பதில்லையென்றும், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது பிள்ளைகளை விடுவித்துத் தரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதுடன், தாம் தமது தொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், போக்குவரத்துக்கான ஒழுங்குகளை செய்து தரும்படியும் கேட்டுக் கொண்டனர். அது தவிர தாம் மிகவும் குறுகிய பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும், தம்மை அண்மித்துள்ள பிரதேசங்களின் கண்ணிவெடியகற்றும் பணிகள் நிறைவுறாத நிலையில் தாம் வெளியிடங்களுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றமையையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனைக் கேட்டறிந்துகொண்ட புளொட் பிரதிநிதிகள் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய வழிவகை செய்வதாக தெரிவித்துள்ளனர். அத்துட்ன புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஈச்சலவக்க தமிழ்க் கிராமத்திற்கு சென்றிருந்த சமயம் அம்மக்கள் தமது நிலைமைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன், முஸ்லிம் மக்கள் சிலர் அப்பகுதிக்கு வந்து இது தமக்குச் சொந்தமான இடமென்றும், நீங்கள் இங்கிருக்க முடியாதென்றும் தம்மை அச்சுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதுவிடயமாக கூடுதல் கனவம் செலுத்தி உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக புளொட் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr