இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

முழு இலங்கையையும் பௌத்த நாடாக ஆக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது : மனோ கணேசன்

JKR  வெள்ளி, 19 மார்ச், 2010

அரசாங்கம் முழு இலங்கையையும் பௌத்த நாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என  ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மனித உரிமைவாதியுமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ரிபிசியில் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளபட்ட மனித உரிமை மீறல்களுக்கு குரல் கொடுத்த அரசியல் கட்சி என்ற ரீதியில் அதனை முதலீடாக வைத்து தேர்தலில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் இவ் அரசாங்கம் பெறுபான்மை பலத்துடன் ஆட்சிக்கு வருமேயானால் சிறுபான்மை மக்களின் பாரளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை பாரளுமன்றத்தில் கொண்டு வர உள்ளது எனவும் அது தமிழ் மக்களை பொறுத்தமட்டில் ஆபத்தானது எனவும் தெரிவித்தார்.
தமிழ் சிங்களம முஸ்லிம் மக்கள் ஒன்று இணைந்து அகில இலங்கையை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளவேண்டிய காலம் இது எனவும் தெரிவித்தார்.
வடகிழக்கில் பல அமைப்புகள் கட்சிகள் சுயோட்சை குழுக்கள் போட்டியிட்டாலும் தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களை பெற்றி வெற்றியடையும் என தெரிவித்தார்.
இதன் ஊடாக புதிய பாரளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கூட்டாக தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக குரல் கொடுக்கும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் ரிபிசியில் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜெனரல் தமிழ் மக்கள் சரத்பொன்சேகவை ஆதரித்தமை அவர் மேல் உள்ள அன்பு பண்பு பாசம் அல்லது காதலோ அல்ல எனவும் ஒரு ஆட்சிமாற்றத்தை நோக்கிய ஆதரவை தான் வழங்கினார்கள் எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியம் என்பது விடுதலை புலிகளினதோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ ஏக போக சொத்து அல்ல எனவும் அது அனைத்து தமிழ் மக்களின் உரிமை குறிப்பிட்ட அவர் ஆயதபோரட்டம் முடிவுக்கு வந்த நிலையில் தமிழ் தேசியம் அழிந்து விட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினார்
தமிழ் தேசியம்த்திற்க்கான போரட்டம் காலத்திற்க்கு காலம் ஏற்றம் இரக்கம் அழிவுகள் தோல்விகளை சந்தித்து கொண்டே தொடர்வதாக கடந்தகாலங்களை நினைவுபடுத்தினார்.
அதேவேளை ஆயதபோரட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகளும் இந்தியாவும் முழுமையான ஆதரவு வழங்கியதை மறந்து விட கூடாது எனவும் தெரிவித்தார்.
மே 18க்கு பிறகு இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகளை பற்றி கேட்டபோது மனித உரிமைகள் என்பது வெறுமனே ஆட்களை கடத்துவதோ அல்லது கப்பம் பெறுவதை மட்டும் கவனத்தில் கொள்ளாது ஏனைய விடயங்களையும் கவத்தில் கொள்ளவேண்டும் அந்த வகையில் வடமராட்சி மூதூர் மன்னார் ஆகிய பகுதிகளில் தமிழ்மக்களின் காணிகளை அரசு கபளிகரம் செய்வதும் மனித உரிமை மீறல்கள் தான் எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் இன்று எதிர்பார்ப்பது பாடசாலைகளையும் அபிவிருத்திகளையும் தான் என ஜனாதிபதி நினைப்பராயின் அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மனித உரிமைவாதியுமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் ரிபிசியில் தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ.ஜெகநாதன் மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர்களுடன் பல நேயர்களும் கலந்து கொண்டு உரையாடினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr