இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

உற்சாகத்தில் சிதம்பரம் அணி... உஷாரில் வாசன் அணி

JKR  ஞாயிறு, 21 மார்ச், 2010


Latest indian and world political news information
ராகுலின் நேரடி கண்காணிப்பில் பரபரப்பாக நடந்து வரும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் தேர்தலில் சிதம்பரம் அணி முன்னிலை பெற்றுள்ளது, வாசன் கோஷ்டிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலை, மற்ற கட்சிகளின் உட்கட்சி தேர்தல் போல் அல்லாமல் முழுக்க, முழுக்க ஜனநாயக முறைப்படி நடத்த ராகுல் உத்தரவிட்டுள்ளார். அதை சிறப்பாகவும் செயல்படுத்தி வருகிறார்.
ஆனாலும்,
காங்கிரசுக்கே உரிய கோஷ்டி ஆதிக்கத்தோடு, தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பரபரப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வருகிறது. மேலோட்டமாக பார்க்கையில், பலம் மிகுந்த வாசன் கோஷ்டியை விட, சிதம்பரம் கோஷ்டியின், 'கை' கொஞ்சம் மேலோங்கி உள்ளதாக அந்த அணியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

அந்த வகையில், சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத் தில் நடந்துள்ள தேர்தல் முடிவு அமைந்துள்ளது. மொத்தம் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில், மூன்றில் சிதம்பரம் கோஷ்டியும், இரண்டு தொகுதிகளில் வாசன் கோஷ்டியும், ஒரு தொகுதியில் ஜெயந்தி நடராஜன் கோஷ்டியும் முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம் சட்டசபை தொகுதிகளில் 55 முதல் 65 சதவீதம் வரை சிதம்பரம் கோஷ்டியினர் வெற்றி பெற்றுள்ளனராம். ஆவடி, பூந்தமல்லி தொகுதிகளில் வாசன் கோஷ்டியினரும், திருவள்ளூர் தொகுதியில் ஜெயந்தி நடராஜன் கோஷ்டியினரும் குறிப்பிடும்படியான முன்னிலை பெற்றுள்ளனராம்.
இது பற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் வாசன் ஆதரவாளர்கள் மெஜாரிட்டியாக உள்ளனர். மேலும், அவர்களில் பலரும் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளும் வகித்து வருகின்றனர். ஆனால், தேர்தல் பணியில் கூடுதல் தீவிரமும் காட்டவில்லை; தேவையான செலவுகளையும் செய்யாமல், 'பர்சை' இறுக்கி பிடித்துக் கொண்டனர்.
அதே சமயத்தில், சிதம்பரம் கோஷ்டியினர் அத்தியாவசிய செலவுகளை தாராளமாக, 'அங்கீகரித்து' வருகின்றனர். அதனால் தான் அவர்கள் பரவலான வெற்றியை பெற முடிந் தது. இந்த உற்சாகத்தில் லோக் சபா தொகுதியிலும், தங்கள் அணி முன்னணிக்கு கொண்டு வர, 'குறி' வைத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மட்டுமல்ல, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் சிதம்பரம் கோஷ்டியின் பலம் உயர்ந்துள்ளது, வாசன் அணியினரை யோசிக்க வைத் துள்ளது. ஏற்கனவே, த.மா.கா.,வில் இருந்து வந்தவர்கள் தான் காங்., கட்சியில் முக்கிய பொறுப்புகளிலும், பதவிகளிலும் உள்ளனர். இப்படி கட்சியிலும், பொறுப்புகளிலும் செல்வாக்கு கொண்டுள்ள தங்கள் கோஷ்டியை, 'ஓவர்லுக்' செய்துள்ள சிதம்பரம் கோஷ்டியை சமாளிக்க, வாசன் ஆதரவாளர்கள் களத்தில் இறங்கி விட்டனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr