வன்னித் தேர்தல் தொகுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று தெரிவித்தார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் 26 சதவீதமான மக்கள் வாக்களித்திருக்கும் அதேவேளை, இடம்பெயர்ந்த மக்கள் 52 வீதமான வாக்களிப்பினை செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். வன்னித் தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று குறிப்பிட்டார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 56 வீதமானோர் வாக்களிப்பு - கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் 56 வீதமானோர் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன்னர் தெரிவித்தார். வாக்களிப்பில் ஈடுபட்டோரில் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்ததாகவும் அவர் கூறினார். தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்
. யாழ் மாவட்டத்தில் 15 சதவீத வாக்குப்பதிவு யாழ் மாவட்டத்தில் 15 சதவீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றிருப்பதாக யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையக அலுவலகச் செய்திகள் தெரிவித்துள்ளன. தற்போது வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்படும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன், பாதுகாப்பு ஏற்பாட்டுடன் நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச்செல்லப்படவிருப்பதாகவும் உதவித் தேர்தல் ஆணையக அலுவலகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இதேவேளை, இன்று மாலை 6 மணியளவில் தபால்மூல வாக்களிப்புக்கள் எண்ணப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் மாவட்டத்தில் இதுவரையில் 33 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தேர்தல் அமைதியான முறையில் இடபெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக