மன நோயாளியான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நவருக்கு அனுராதபுரம் நீதவான் எட்டு மாதகால கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் ஆயிரத்து ஐநூறு ரூபா தண்டம் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தண்டனை பெற்றவர் அனுராதபுரம் மகாபானாடிக்குளம் பகுதியைச் சேர்ந்த வீ.ஜே.ஜயசேகர (வயது 65) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு வயதான மன நோயாளியான குறித்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என இவர்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணை முடிவில் அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டப் பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் மூன்றுமாதம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக