இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை அசிங்க லீலைகள் அடங்கிய மேலும் பல சிடிக்கள் ஆவணங்கள் சிக்கின

JKR  புதன், 7 ஏப்ரல், 2010



பெங்களூர் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், கர்நாடக சிஐடி போலீசார் கடந்த 2 நாட்கள் சோதனை நடத்தினர். சோதனையில் வழக்கு தொடர்புடைய முக்கிய  அசிங்க லீலைகள் அடங்கிய மேலும் பல சிடிக்கள் ஆவணங்கள் சிக்கின
நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதில் இருந்து நித்யானந்தா தலைமறைவானார்.
இந்தியா முழுவதும் மட்மின்றி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இவருக்கு ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடம்தான் இவற்றின் தலைமையகமாக உள்ளது.
பாலியல் மற்றும் மோசடி புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்ததால், தியான பீடத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நித்யானந்தா சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பிடதி ஆசிரமத்தில் கர்நாடக சிஐடி போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கிய இந்த சோதனை, நேற்று முழுவதும் நடந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக சிஐடி எஸ்.பி, யோகப்பா கூறியதாவது,
நித்யானந்தா மீதான வழக்குகள் கர்நாடக காவல்துறைக்கு தமிழக காவல்துறையினர் கடந்த மாதம் மாற்றியதை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, அவருடைய பிடதி ஆசிரமத்தில் நடத்தப்படும் முதல் சோதனை இதுதான். இதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டது.
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா பாலியல் உறவில் ஈடுபட்ட படுக்கை அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில், புலனாய்வுக்கு தேவையான சில முக்கிய ஆவணங்கள் கிடைத்தன. மேலும், ஆசிரமத்தில் மற்றவர்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. விசாரணை முழு வீச்சில் நடைபெறுகிறது என்றார்.
ஆசிரமத்தில் கிடைத்துள்ள ஆவணங்கள் மூலம் நித்யானந்தாவின் சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் முக்கிய ஆவணங்களை முன்பே அழித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr