இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மட்டக்களப்பில் கடும் போட்டி நிலவுகிறது

JKR  திங்கள், 5 ஏப்ரல், 2010


 

மட்டக்களப்பு-வரைபடம்
மட்டக்களப்பு-வரைபடம்
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்துள்ளன.
வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் புதிய உத்திகளை பின்பற்றி அழுத்தமான வாக்குறுதிகளை அளித்து தமது பிரசாரங்களை மேற்கொண்டனர்.
பல கட்சிகளும் பெருமளவிலான வேட்பாளர்களும் போட்டியிடுவதால் வாக்காளர்கள் குழம்பிய நிலையில் உள்ளனர் என்று தமிழோசையின் செய்தியாளர் கூறுகிறார்.
மாகாண சபைக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும்
பிரசாரத்தில் பிள்ளையான்
பிரசாரத்தில் பிள்ளையான்
மாகாண சபைக்கு அதிக அதிகாரம் என்பதே தமது முக்கிய கோரிக்கை என கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறுகிறார்.
அதிகாரம் மிக்க மாகாண சபையை பெற்றுக் கொள்வது, அழிந்து போயுள்ள கிழக்கு மாகாணத்தை மிக வேகமாக அரசோடு சேர்ந்து அபிவிருத்தி செய்வது என்கிற நிலைப்பாட்டை வாக்காளர்களிடம் வலியுறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வாக்கு கேட்பதாகவும் சந்திரகாந்தன் தெரிவிக்கின்றார்.
 கிழக்கு மாகாண சபையை அதிகாரம் மிக்க மாகாண சபையாக ஆக்க வேண்டும், அதற்கு ஆணை வழங்குங்கள்
 
சிவநேசத்துரை சந்திரகாந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களையே இந்தத் தேர்தலில் பிரதான போட்டியாளர்களாக தங்கள் கட்சி கருதுகின்றது என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
அரசுடன் சேர்ந்தும் பிரிந்தும் இயங்குவோம்
மட்டக்களப்பு மீனவர்
மட்டக்களப்பு மீனவர்
மாகாணத்தின் அபிவிருத்தியை மனதில் நிறுத்தி அதற்காக தற்போது அரசுடன் சேர்ந்து இயங்கி வருவதாகக் கூறும் கிழக்கு மாகாண முதலமைச்சர், கடந்த காலங்களைப் போல பேரினவாத சக்திகளும், கொழும்பு அரசும் தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொள்ளாத வகையில் செயற்பட்டால் பிரிந்தும் இயங்க தயங்க மாட்டோம் என்றும் கூறுகிறார்.
ஆனால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்காக தமது அமைப்பு குரல் கொடுத்து, அதன் அடிப்படையிலேயே வாக்கு கோருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக இருந்து, தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கும் என்பதையே தாங்கள் பிரச்சாரத்தில் வலியுறுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளரான பா. அரியநேந்திரன் கூறுகிறார்.
முன்னாள் போராளிகளுக்கு பொது மன்னிப்பு
த.தே.கூ வேட்பாளர்கள்
த.தே.கூ வேட்பாளர்கள்
விடுதலைப் புலிகள் அமைப்பில் முன்னர் இருந்த போராளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான பொது மன்னிப்பையும் தாங்கள் ஒரு பிரதான விடயமாக இந்தத் தேர்தலில் வலியுறுத்தி வருவதாகவும் அரியநேந்திரன் தமிழோசையிடம் கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் முடிவுகளின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அழைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் கூறுகிறார்.
தமது அமைப்பைச் சேர்ந்த சிலர், கடந்த முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளிலேயே அதிக காலம் தங்கியிருந்ததை சுட்டிக் காட்டும் எதிர்க்கட்சியினர், அதற்கான காரணத்தை மறந்து விடுகிறார்கள் என்றும், அதைத் தவிர தமது கூட்டமைப்பின் மீது அரசியல் ரீதியாக வேறு காரணங்களை சுமத்த முடியாத நிலையில் உள்ளனர் என்றும் அரியநேத்திரன் கூறுகிறார்.
குழப்பத்தில் மக்கள்
இடைத்தங்கல் குடியிருப்புகளில் மக்கள்
இடைத்தங்கல் குடியிருப்புகளில் மக்கள்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெருமளவிலான கட்சிகளும் வேட்பாளர்களும் போட்டியிடும் சூழலில்,யாருக்கு வாக்களிப்பது என்பதில் மக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.
எனினும் பெரும்பாலான மக்களிடையே ஒரு தமிழ்க் கட்சி அல்லது ஒரு தமிழ் வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு காணப்படுகிறது.
எந்தக் கட்சி மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதி செய்கிறதோ அந்தக் கட்சிக்கே தமது வாக்கு என்று சிலர் கூறுகிறார்கள்.
இளைஞர்களை கவர விளையாட்டு உபகரணங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர்களை தேர்தல் காலத்தில் கவரும் விதமாக அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நடவடிக்கையிலும் பல வேட்பாளர்கள் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள பல கிராமங்களிலிருந்து மக்கள் பேரூந்துகளில் மட்டக்களப்பு நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று அங்கிருக்கும் தமிழோசையின் தயாரிப்பாளர் தெரிவித்தார். 

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr